சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இந்து தீவிரவாதி" விவகாரம்.. கமல் மீது கிரிமினல் நடவடிக்கை.. டெல்லி கோர்ட்டில் இந்துசேனா வழக்கு

கமல்ஹாசன் மீது டெல்லி கோர்ட்டில் இந்து சேனா அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சைப் பேச்சு.. கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

    சென்னை: இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கமல் பேசிவிட்டார், அவர் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

    பள்ளப்பட்டியில் கமல் பேசிய பேச்சு நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே" என்று சொன்னது விவாதம், சர்ச்சை, புகார் என நீண்டு வருகிறது.

    பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டி தீர்த்துவிட்டார்கள். அதேபோல, ராம்தாஸ் அத்வாலே, நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து விட்டார்கள்.

    சந்திரசேகரராவை சந்தித்திருப்பது ஸ்டாலினின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது... அன்புமணி பேச்சு சந்திரசேகரராவை சந்தித்திருப்பது ஸ்டாலினின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது... அன்புமணி பேச்சு

    பிரச்சாரத்திற்கு தடை

    பிரச்சாரத்திற்கு தடை

    இதைதவிர, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமல் மீது பாஜக தரப்பில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவும் அளித்தாயிற்று. கமலின் தேர்தல் பிரச்சாரத்துக்குக் குறைந்தது 5 நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும், கமல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வரிசையாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

    இந்து சேனா

    இந்து சேனா

    இந்த லிஸ்ட்டில், இந்து சேனா அமைப்பும் இணைந்துள்ளது. இது சம்பந்தமாக கோர்ட்டுக்கே போய்விட்டார்கள். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதனை மே 16-ம் தேதி விசாரிப்பதாக கோர்ட் அறிவித்துள்ளது.

    கோரிக்கை

    கோரிக்கை

    "இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கமல் பேசிவிட்டார், அதனால் அவர் மீது கிரிமினல் சட்டப்படி கமல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று இந்து சேனா அமைப்பு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

    ஆதரவுகள்

    ஆதரவுகள்

    என்னதான் கமல் மீது புகார்கள் ஒரு பக்கம் எழுந்தாலும், கமல் சொன்னது சரிதான் என்றும், "இஸ்லாம் மதத்தில் எப்படி ஐஎஸ் இருக்கிறதோ, அதுபோல அதற்கு இணையாக இந்து மதத்தில் இருக்கிற அமைப்பு ஆர்எஸ்எஸ், அதனால் கமல் சொன்னதை 100 விழுக்காடு ஆமோதிக்கிறோம்" என்று மற்றொரு புறம் ஆதரவுகளும் வரிசை கட்டி நிற்கின்றன.

    English summary
    Hindu Sena organization filed complaint against Kamal hasan in Delhi Patiala court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X