பராசக்தி ஹீரோடா! கணேசமூர்த்தி “சிவாஜி”ஆன கதை.. பின்னணியில் பெரியார், அண்ணா - முதல்வர் ஸ்டாலின் பதிவு
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சிவாஜி என்ற பெயர் எப்படி வந்தது என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் நடிப்பு நாயகனான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் அமைந்து இருக்கும் மணிமண்டபத்திற்கு வெளியே நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வையில் தென்படும் வகையில் சிவாஜி சிலையை அமைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதன்படியே வெண்கல சிலை வெளியே அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மரியாதை
இந்த நிலையில் இன்று காலை சிவாஜி மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சென்றனர். அங்கு வெண்கல சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த சிவாஜியின் உருவபடத்திற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து மணிமண்டபத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினரிடம் பேசினார்.

நடிப்புக்கு இலக்கணம்
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மணிமண்டபத்துக்குள் இருந்து வெளியே வைக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். நடிப்புக் கலைக்கு என்றும் இலக்கணமாகத் திகழுபவர் நடிகர் திலகம்!

பெரியார், அண்ணா
பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் 'சிவாஜி' என்ற பட்டம் பெற்று, அந்தப் பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர். பராசக்தி ஹீரோவாக புரட்சிக் கனல் கக்கி, வரலாற்று நாயகர்களின் திரை வடிவமாக நம் மனதில் பதிந்துள்ள நடிகர் திலகம் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரனைய நண்பர்.

பராசக்தி ஹீரோ
1952-இல் வெளியான அவரது முதல் திரைப்படமான பராசக்திக்கு இது 70-ஆம் ஆண்டு. முத்தமிழறிஞர் கலைஞரின் கூர்மிகு தமிழும் நடிகர் திலகத்தின் நடிப்பும் தமிழ்த் திரையுலகின் திருப்புமுனைகள்! கலை உள்ள வரை செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்!" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications