சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"காவி" கனவு தகர்கிறது?.. "தலைவர்" ரெடியாயிட்டாராமே.. அப்ப பாஜக என்னாகும்.. கிளைமேக்ஸ் எடப்பாடியிடமே

பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குகிறாராம் அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: திடீரென தங்களுக்கு எதிராக, இத்தனை கட்சிகள் வண்டியை கிளப்பிவிட்டுள்ளது, தமிழக பாஜகவுக்கே சற்று ஷாக்தான்.. அதிலும் பாமக வேற லெவலில் நின்று யோசித்து வருகிறதாம்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை,உயிருடன் இருந்தவரை நாம் பார்த்த பாஜக வேறு.. இன்று நாம் பார்க்கும் பாஜக வேறு.

அன்று, ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணியே வைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்று கொண்டிருந்தார்.. கூட்டணி விவகாரத்தில் டெல்லி பாஜக, ஜெயலலிதா என்ன முடிவை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருந்தனர்..

முஹம்மது நபி பற்றி பாஜக பிரமுகர் அவதூறு.. உ.பியில் மதக்கலவரம் - புல்டோசர் வரும் என போலீஸ் எச்சரிக்கைமுஹம்மது நபி பற்றி பாஜக பிரமுகர் அவதூறு.. உ.பியில் மதக்கலவரம் - புல்டோசர் வரும் என போலீஸ் எச்சரிக்கை

 காவி கொடி

காவி கொடி

இத்தனை சீட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததில்லை.. மிரட்டல் விட்டதில்லை.. அவசரப்படுத்தியதில்லை.. மத்தியில் ஆட்சியில் உள்ளதால், அதை வைத்து காரியம் சாதித்துக் கொண்டதில்லை.. "சும்மா தனித்து நின்றாலே நாங்கள் 70 இடங்களில் வெற்றி பெறுவோம், கோட்டையில் காவி கொடியை பறக்க விடுவோம்" என்று அண்ணாமலை போன்று அதிமுகவை மிரட்டி சீட் கேட்டதில்லை.

 கோட்டையில் காவி

கோட்டையில் காவி

காரணம், விரும்பிய உடன்பாட்டுக்கு சம்மதிக்காவிட்டால், தனித்து தேர்தல் களத்தை சந்திக்கும் ஆற்றலும் துணிச்சலும் ஜெ.விடம் தாராளமாகவே நிரம்பி கிடந்தது.. ஜெ.,மறைவுக்கு பிறகு, அதிமுகவின் நிலைமை தலைகீழாகி வருகிறது.. உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்தும், வாய்மூடி வருகிறது.. பொன்னையன் துணிந்து பேசிவிட்டாரே என்று ஒருகணம் நினைத்தால், அது அவர் சொந்த கருத்து என்று சொல்லி விட்டார்கள்.

 சிவி சண்முகம்

சிவி சண்முகம்

அதற்கேற்றபடி, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தாலும் அவர்களுக்குள் இணக்கமான மனநிலையில் இல்லை என்பதே கள உண்மையாக உள்ளது.. தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துப்போனாலும், கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் பாஜகவில் கூட்டணி வைப்பதால்தான் வெற்றி பெற முடியவில்லை என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்... இதைதான் அன்றே சிவி சண்முகமும் சொல்லி இருந்தார்.

 தப்பு கணக்கு

தப்பு கணக்கு

இப்போது விஷயம் என்னவென்றால், பாஜக இல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டுள்ளாராம்.. அதாவது தேசிய அளவில் பாஜக இல்லாத கூட்டணிக்கு, அன்று சந்திரபாபு நாயுடு, இன்று மம்தா பானர்ஜி முயற்சித்து கொண்டிருப்பது போல, தமிழக அளவில் ஒரு கணக்கு போட்ட வைத்துள்ளாராம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.. அதிமுக - பாஜக இடையே நடக்கும் கடந்த 4 நாட்கள் கசப்புகளை வைத்து, அதிமுகவை கொம்பு சீவி விட்டு வருவதாக கூறப்படுகிறது... இந்த விருப்பத்தை எடப்பாடி பழனிசாமியிடம் சந்தித்து பேசியபோதுகூட சொன்னாராம்.

 திமுக - அதிமுக

திமுக - அதிமுக

அதாவது, வலுவான இதே கூட்டணியோடு, எம்பி தேர்தலையும் சந்திக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டால், அந்த வலுவான கூட்டணியை பலவீனமாக்கும் முயற்சியைதான் அன்புமணி கையில் எடுத்துள்ளாராம்.. இதற்கு காரணம், திமுக & அதிமுக என 2 கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்தும், வெற்றி பெற முடியவில்லை.. தனித்து போட்டியிட்டும்கூட எதிர்பார்த்த அளவுக்கு பாமகவால் சாதிக்க முடியவில்லை.. அதனால்தான், தன்னுடைய தலைமையில் கட்சியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறாராம் அன்புமணி.. அதற்கு எம்பி தேர்தல் களத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளாராம்.

 துரைமுருகன்

துரைமுருகன்

திமுகவை பொறுத்தவரை, பாமகவை சேர்த்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்படவில்லை.. ஆனால், பாமக திமுகவை அனுசரித்து போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. வன்னியர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினையே நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.. துரைமுருகன் வேண்டுமானால், வழக்கம்போல், பாமகவை உள்ளே வரும் முயற்சியில் இறங்கலாமே தவிர, திமுக மேலிடத்துக்கு அந்த எண்ணம் இல்லை என்பதே தற்போதைய நிலைப்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது.

 2 மாங்காய்

2 மாங்காய்

அதனால்தான், அதிமுக பக்கம் தன்கவனத்தை முழுமையாக திரப்பி உள்ளது பாமக.. பாஜக இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி, அதன் மூலம் பாஜகவின் அதிருப்தி ஓட்டுகள், மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுகள் இரண்டையுமே தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பதே அன்புமணியின் ஸ்மார்ட் பிளான் என்கிறார்கள். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற போதே இருவரும் இந்த விஷயங்களை பேசியதாகவும் தெரிகிறது.

 மாற்றம் - முன்னேற்றம்

மாற்றம் - முன்னேற்றம்

இருந்தாலும், அன்புமணியின் முயற்சி எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. 2026-ல் "தமிழகத்தில் பாமக ஆட்சி அமைய, உழைக்கும் தொண்டர்களில் நானும் ஒருவன்" என்று சொல்லி வருகிறார் அன்புமணி.. இதையேதான், கடந்த 2011-லிலும் சொன்னார்.. அதற்கு அடுத்தடுத்த தேர்தலிலும் சொல்லி கொண்டே வருகிறார்.. மாற்றமுமில்லை.. முன்னேற்றமுமில்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து..

 வன்னியர்கள்

வன்னியர்கள்

அதுமட்டுமல்லாமல், "ஜாதியால் நன்மை விளைகிறது" என்ற கருத்தையும் விதைத்து வருவது, பாமகவுக்கு எந்த அளவுக்கு பலன் தருமோ தெரியவில்லை.. காரணம், வன்னியர்களுக்காக ஆரம்பித்த பாமக, இன்று அந்த வன்னியர்களே எதிர்க்கும் அளவுக்கு சென்றுவிட்டதையும் தமிழகம் கண்டு வருகிறது.. எனினும், பாஜகவுக்கு எதிரான அன்புமணியின் முயற்சி ஓரளவு பலம் தரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அப்படியானால், மாற்றம் முன்னேற்றம் இனியாவது நடக்குமா? பார்ப்போம்..!

English summary
How are anti-BJP parties going to be formed and What is Anbumani eramadoss Plan பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குகிறாராம் அன்புமணி ராமதாஸ்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X