மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டோமே! நகைக் கடையில் கைவரிசை! கொள்ளையன் சிக்கியது இப்படித் தானாம்!
சென்னை : தாம்பரம் அருகே தங்கம் மற்றும் வைரம் விற்பனை செய்யும் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடி சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை போலீசார் மேல் சட்டயை அடையாளமாக வைத்து இரண்டு மணி நேரத்தில் கைது செய்தனர்
தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் கௌரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை உள்ளது,
இங்கு நேற்று இரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்,

கொள்ளை
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் கடையின் ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் செல்போனுக்கு எச்சரிக்கை ஒலி அடித்துள்ளது. அதன் பின்னர் அவர் சுமார் ஆறு மணிக்கு மேல் எச்சரிக்கை ஒலி அடித்தது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கைரேகை நிபுணர்களுடன் வந்த சேலையூர் போலீசார் கடை ஊழியர்களின் உதவியுடன் உள்ளே வந்து பார்த்தனர்.

சிசிடிவி
அப்போது காட்சிக்காக வைக்கபட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் திருடப்பட்டது தெரியவந்ததை அடுத்து தடயங்களை சேகரித்தனர். இதனையடுத்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மேல் சட்டையில் முகத்தை மூடியபடி இளைஞர் ஒருவர் திருடும் காட்சிகள் பதிவாகிருந்தது.

விசாரணை
இதனையடுத்து தனிபடை அமைத்த போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது டீ கடையில் சந்தேகப்படும் வகையில் வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர் தங்கிருந்த அறைக்கு சென்று சோதனை செய்து போது முகமுடிக்காக பயன்படுத்தபட்ட மேல் சட்டை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சிக்கியது எப்படி?
அதில்தீவிர விசாரனையில் அசாம் மானிலத்தை சேர்ந்த அலி பல் என்பதும் அப்பகுதியில் தள்ளு வண்டியில் குளிர்பான கடை நடத்தி வருவதாகவும் கடையின் தண்ணீர் குழாய் வழியாக சென்று கொள்ளையடித்ததை ஒப்புகொண்டதை அடுத்து கொள்ளையன் உடன் நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை கைது செய்த போலீசார் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications