சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 புள்ளிகளுக்கு குறி.. "மோப்பம்" பிடித்த பாஜக.. பறந்து வந்த மேலிட ஆர்டர்.. திமுக சமாளிக்குமா?

: எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரனுக்கு சிக்கல்கள் கூடியுள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுக்கு மாற்று தாங்கள் என்பதை நிரூபிக்கும் சாத்தியக்கூறுகளை நோக்கி தமிழக பாஜக நகர்ந்து வருகிறது.. இதற்காக 3 பேரையும் குறி வைத்துள்ளதாம்..!

சமீப காலமாகவே, பாஜகவின் நடவடிக்கைகள் திமுகவுக்கு எரிச்சலை கிளப்பிவிட்டு வருகிறது.. திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து, அதை நடத்தியும் வருகிறது..

நள்ளிரவில், டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி.. ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணம் நள்ளிரவில், டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி.. ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணம்

அறிக்கைகள், ட்வீட் பதிவுகள் மூலமும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தும் வருகிறது.. இவைகள் எல்லாம் சேர்ந்து திமுக அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவே தெரிகிறது.

 காய் நகர்த்தல்கள்

காய் நகர்த்தல்கள்

இதற்கெல்லாம் சரியான பதிலடிகளையும், தர்க்க ரீதியான வாதங்களையும், புள்ளிவிவரங்களுடன் கூடிய தரவுகளையும், அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் அவ்வப்போது தந்து வருகிறார்கள்.. எனினும், பாஜக எம்பி தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தல்களை தொடங்கி உள்ளது. அந்த வகையில், திமுகவுக்கு நெருக்கடி தந்து கொண்டே, பிற கட்சிகளையும், முக்கிய புள்ளிகளையும் டார்கெட் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

 3 புள்ளிகள்

3 புள்ளிகள்

இதில் முக்கிய நபர்களாக 3 பேர் உள்ளனர்.. ஒருவர் எடப்பாடி பழனிசாமி, மற்றொருவர் சசிகலா, இன்னொருவர் டிடிவி தினகரன் ஆவார்.. டிடிவி தினகரன் மீது, கடந்த 2 வருடமாகவே பாஜகவுக்கு பார்வை உள்ளது.. தினகரனின் செல்வாக்கு, வியூகம், தன் கையில் வைத்திருக்கும் அமமுக வாக்கு சதவீதம் போன்றவற்றை பாஜக மேலிடம் குறி வைத்துள்ளது.. அதனால், தினகரனை தன் கூட்டணியில் கொண்டுவரும் முயற்சிகளையும் கையில் எடுக்க போவதாக தெரிகிறது.

 டிடிவிக்கு செக்

டிடிவிக்கு செக்

அதற்கேற்றபடி, தினகரன் மீதான கேஸ்களை தூசி தட்டி எடுத்து, அவரை கடுப்பேற்றியும் வருகிறது.. இந்த வழக்கு, விசாரணைகளிலேயே டிடிவி தினகரன் டென்ஷன் ஆகி உள்ளதுடன், இந்த வழக்குகளே அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சூழல் கூடி வருவதாக தெரிகிறது.. இது பாஜகவுக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளதாம்.. இந்த வழக்கு விசாரணைகளை வைத்தே கூட்டணிக்குள் இழுத்து போடும் முயற்சி மேற்கொள்ளப்படலாம்.. அல்லது தங்களுக்கு எதிராக தினகரனை மேலெழுந்துவிடாமலும் பார்த்து கொள்ளலாம் என்று பாஜக கணக்கு போடுவதாக கூறுகிறார்கள்.

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

அதேபோல சசிகலாவை எடுத்து கொண்டால், பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு, அந்நிய செலாவணி வழக்கு, கொடநாடு வழக்கு, என சசிகலா எந்த பக்கமும் திரும்பினாலும் பிரச்சனைகள் முட்டிக் கொண்டு நிற்கின்றன... இதில் இருந்து சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், அவரும் அரசியலில் தலையெடுக்காமல் பாஜக கவனமாக பார்த்து கொள்வதாக சொல்கிறார்கள்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, நிறைய சிக்கலில் இருக்கிறாராம்.. குறிப்பாக கொடநாடு விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கி வரும் நிலையில், இதையும் பாஜக வேடிக்கை பார்த்து வருகிறது.. திமுகவை விமர்சித்து தன்னுடைய ஆளுமையை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து வரும் நிலையில், அதையும் ஓரளவு மட்டுப்படுத்த பாஜக யோசிக்கிறதாம்.. இப்படி சசிகலா, தினகரன், எடப்பாடி என முக்கிய புள்ளிகளை வழக்கு விசாரணைகள் மூலம் திருப்பிவிடுவதன் மூலம், அதிமுகவின் வீர்யம் குறைந்துவிடும் என்றும், இப்படிப்பட்ட சூசூழலில் பாஜகவின் இமேஜை உயர்த்தலாம் என்பதே மேலிடத்தின் பலே திட்டமாம்..

 பாஜக செக்

பாஜக செக்

சுருக்கமாக சொன்னால், திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்பதை மீண்டும் நிரூபிக்கும் முயற்சியிலேயே டெல்லி இறங்கி உள்ளது.. ஆளுக்கு ஒரு பிரச்சனையில் ஒவ்வொரு புள்ளியும் சிக்கி உள்ளநிலையில், பாஜக தனக்கு நேரடி குறி வைத்துள்ளது என்பதை அறிந்த நிலையில், திமுக இதை எப்படி அணுக போகிறது? பாஜகவை எப்படி சமாளிக்க போகிறது? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. பார்ப்போம்..!

English summary
How is the BJP going to become an alternative to the DMK and Targeted at three politicians? எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரனுக்கு சிக்கல்கள் கூடியுள்ளன
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X