சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொன்னபடியே செய்து காட்டிய நாசர்.... ஆவடியில் 'மாஃபா' படுதோல்வி... ஜெயித்த திமுக 'மிஷன்'!

Google Oneindia Tamil News

சென்னை: ஆவடி தொகுதியை குறிவைத்து அபார வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை, படுதோல்வி அடையச் செய்துள்ளது திமுக.

சட்டசபை தேர்தல் தேதி குறித்ததுமே, ஒரு ஹிட் லிஸ்ட்டை கையில் எடுத்தது திமுக தலைமை. அதிலும் குறிப்பாக, அமைச்சர்கள் அந்த பட்டியலில் நிறைந்திருந்தனர்.

ஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம் ஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம்

இந்த அமைச்சர்களை அவர்கள் தொகுதியில் கண்டிப்பாக தோற்கடித்து விடவேண்டும் என்று சூளுரை செய்யப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியானது. அதில் ஒரு அமைச்சர் தான் மாஃபா பாண்டியராஜன்.

 தோற்கடிக்க வியூகம்

தோற்கடிக்க வியூகம்

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போதிலும் அவர் பாஜக கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக, திமுக தரப்பில் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதுதான் பாண்டியராஜனை தோற்கடிக்க வேண்டும் என்று வியூகத்துக்கு முதல் காரணம் என்று கூறப்படுகிறது.

 வென்ற நாசர்

வென்ற நாசர்

இந்த நிலையில்தான், 2016 சட்டசபை தேர்தலின்போது, குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வியடைந்த நாசர் மீண்டும் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டார். எப்படியும் பாண்டியராஜனை தோற்கடித்தே தீருவேன் என்று அவரும், தனது தேர்தல் பிரச்சாரத்தில் சூளுரைத்ததைப் பார்க்க முடிந்தது. திட்டமிட்டபடியே இப்போது மாஃபா பாண்டியராஜனை 54695 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார் நாசர்.

 வாக்குகள் பிரிந்தன

வாக்குகள் பிரிந்தன

2011 மற்றும் 2016 சட்டசபைத் தேர்தல்களில் ஆவடியை கைப்பற்றியிருந்தாலும், இப்போது அதிமுகவுக்கு நாசர் தடைக் கல்லாக மாறினார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் போனது. இன்னொரு பக்கம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு, அதிமுக வாக்குகளைப் பிரித்தது என இரட்டை நெருக்கடியில் சிக்கிய மாஃபா பாண்டியராஜன் எளிதாக தோற்கடிக்கப்பட்டார்.

 திட்டம் சக்சஸ்

திட்டம் சக்சஸ்

திமுக தலைமையும் சரி.. நாசரும் சரி.. மாஃபா பாண்டியராஜனை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள். எனவே தான், அமைச்சராக இருந்த போதிலும், இத்தனை பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டு உள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
How mafoi Pandiarajan defeated by DMK candidate Nasar in Avadi constituency? here is the detail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X