படிக்கும்போதே தலை சுற்றுதே.. ராஜேந்திரபாலாஜி யார் யாரிடம் எவ்வளவு ஏமாற்றினார்?.. போலீஸ் பட்டியல் இதோ
சென்னை: அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தேடும் பணி தீவிரம்
ஆனால் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்த தகவல் அறிந்தவுடன் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். தனிப்படை போலீசார் மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
மேலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் "லுக்-அவுட்" நோட்டீசும் கொடுத்துள்ளனர். தொடர்ந்து பலரும் தன்னை ராஜேந்திரபாலாஜி ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார்கள் கொடுத்து வருகின்றனர். அவர் மீது மொத்தம் 7-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யார் யாரிடம் எவ்வளவு பணம்?
இதனால் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார்? என்கிற விவரத்தை விருதுநகர் மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ளது. ஏமாற்றப்பட்டவர்களிடம் பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த பட்டியலை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

மதுரை, சாத்தூர்
சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ரூ.30 லட்சம், இரா.முருகன், க.முருகன், இளங்கோ, பரமசிவம் ஆகியோர் ரூ.1.60 கோடி, ஹரிபாலு ரூ.5.20 லட்சம், கார்த்திக்குமார் ரூ.16 லட்சம், மதுரை கோமதிபுரம் 5-வது தெருவைசேர்ந்த செல்வராஜ் ரூ.16 லட்சம், திருவில்லிபுத்தூர் பாப்பா அங்குராஜ் நகரில் வசிக்கும் வெங்கடாசலம் ரூ.10 லட்சம் என ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துள்ளனர்.
Recommended Video

நேரடியாக கொடுத்துள்ளனர்
இதேபோல் சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த குணா தூயமணி ரூ.17 லட்சம், மதுரை வில்லாபுரம் காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் ரூ.7 லட்சம், நெய்வேலி அலங்கரைச்சாமி மகன் ஜோசப்ராஜ் என்பவர் ரூ.7.50 லட்சம் என ராஜேந்திர பாலாஜியிடம் தந்து ஏமாந்துள்ளனர். பணம் கொடுத்தவர்கள் இவற்றை சாத்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி உள்ளிட்ட கட்சி பிரமுகர்களிடமும், ராஜேந்திர பாலாஜியிடமும் நேரடியாக கொடுத்துள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications