தமிழகத்தில் 2013ல் SI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?
சென்னை: 2013ல் சப் இன்ஸ்பெக்டராக தமிழக காவல்துறையில் வேலைக்கு சேர்ந்தவர் இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.. பொதுவாக தமிழகக் காவல்துறையில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தற்போது 2026-ல் சுமார் 13 ஆண்டுகள் பணியனுபவத்தைக் கொண்டிருப்பார். அத்துடன் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றிருப்பார். அவரது தற்போதைய தோராயமான சம்பள விவரங்களை பார்ப்போம்
தமிழ்நாட்டில் காவலர், சப்-இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி ஆகிய பணியிடங்களுக்கு நேரடியாக போட்டி தேர்வுகள் மூலம் சேர முடியும். இதில் பலரது கனவு சப் இன்ஸ்பெக்ராக பணியில் சேருவது தான். நல்ல மரியாதை கிடைக்கும். 10 வருடங்களில் இன்ஸ்பெக்டர் ஆகிவிடலாம்.. நல்ல ஊதியம், வாழ்க்கை தரம் எல்லாமே மாறிவிடும். ஒரு தலையின் வாழ்க்கையே வேறு மாதிரி மாறியிருக்கும். எனவே லட்சக்கணக்கான இளைஞர்கள் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர விரும்புகிறார்கள்.

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்ந்தவர் இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்பதை பார்ப்போம். தமிழகக் காவல்துறையில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் , தற்போது 2026-ல் சுமார் 13 ஆண்டுகள் பணியனுபவத்தைக் கொண்டிருப்பார். அத்துடன் அவர் தற்போது இன்ஸ்பெக்டராக பதவியில் இருப்பார். 2026-ஆம் ஆண்டு சம்பள விவரம் தோராயமாக எவ்வளவு என்று பார்ப்போம்.
பொதுவாக 10 முதல் 12 ஆண்டுகளில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவார். எனவே 2026-ல் 7-வது ஊதியக் குழுவின் படி அவரது ஊதிய நிலை லெவல் 20 ஆக இருக்கும். எனவே இன்ஸ்பெக்டரான பின்னர் அடிப்படை ஊதியம் சுமார் ₹56,100 - ₹62,000 (13 ஆண்டு கால வருடாந்திர உயர்வுகள் மற்றும் பதவி உயர்வு ஊதிய உயர்வுபடி) ஆக இருக்கும். அத்துடன் அத்துடன் அகவிலைப்படி 2026 ஏப்ரல் நிலவரப்படி இது சுமார் 50% முதல் 53% வரை இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் அகவிலைப்படி மட்டும் ₹29,000 வரை இருக்க வாய்ப்பு உள்ளது. வீட்டு வாடகைப்படி பணியிடத்தைப் பொறுத்து (சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரம் என்றால் அதிகம்) ₹5,000 - ₹10,000 வரை இருக்கும். இதர படிகள் மற்றும் காவல்துறைக்கு வழங்கப்படும் சிறப்புப் படிகள் சேர்த்து சுமார் ₹4,000 - ₹6,000 வரை இருக்கும்
13 வருட அனுபவத்திற்கு பிறகு எஸ்ஐ ஆக இருந்தவர் இன்ஸ்பெக்டராக மாறி இருந்தால், அவரது மாத மொத்தச் சம்பளம், ₹95,000 முதல் ₹1,05,000 வரை இருக்கும். புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக சுமார் ₹8,500 வரை பிடித்திருப்பார்கள். காப்பீடு 1000 ரூபாய். வருமான வரி ( மாதத்திற்கு சுமார் ₹3,000 - ₹5,000 பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்ஸ்பெக்டருக்கு பிடித்தங்கள் போக, அவர் கைக்கு ₹82,000 முதல் ₹90,000 வரை இருக்க வாய்ப்பு உள்ளது. இது தோராய கணக்கு மட்டுமே. ஒவ்வொருவருக்கும் சற்று மாறுபடும்
-
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
நாளை முதல் வருமான வரி மாற்றம் வருகிறதா? மாத சம்பளம் வாங்குவோருக்கு புதிதாக என்னென்ன சலுகைகள்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே














Click it and Unblock the Notifications