அதிர வைக்கும் “அந்தரங்க மாஃபியா”.. கழுகுபோல் காத்திருக்கும் கேமரா! ஹோட்டலில் கண்டுபிடிப்பது எப்படி?
சென்னை: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஹோட்டல் அறைகளின் மறைவிடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி அந்தரங்க வீடியோக்களை, நிர்வான வீடியோக்களை பதிவு செய்து மிரட்டுவதும், ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களும் விற்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த சூழலில் ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி? என்பதை பார்ப்போம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வழக்கில் 2 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமராக்களை வைத்து, அதில் தங்கும் நபர்களின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து பகிர்வது இவர்களின் வழக்கம்.

ஹோட்டல் அறைகளில் கேமராக்கள்
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், "கைது செய்யப்பட்ட 2 பேரும் முதலில் ஹோட்டல் அறைகளை புக்கிங் செய்வார்கள். அதன் பின்னர் அங்கு கேமராக்களை வைப்பார்கள். பின்னர் அடுத்து வரும் வாடிக்கையாளர்களின் அந்தரங்க வீடியோக்களை அந்த கேமராவில் பதிவு செய்வார்கள். அறையை சுத்தம் செய்ய செல்லும் ஹோட்டல் ஊழியர்களால் கூட கேமரக்களை கண்டுபிடிக்க முடியாது." என்றனர்.

எங்கே இருக்கும்?
இதற்கு முன்பும் இதுபோல் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. இதுபோன்ற கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்ப்போம். குறிப்பாக கண்ணாடிகள் பின்புறமும் சீலிங்கில் உள்ள டெகாரேசன்களிலும் விளக்குகளிலும் அங்கிருக்கும் பூந்தொட்டிகளிலும், பாத்ரூம் ஷவர்களிலும் கதவுகளிலும் என பல இடங்களில் இதுபோன்ற ரகசிய கேமராக்களை பொறுத்துவார்கள்.

முகம் பார்க்கும் கண்ணாடிகள்
இதில் பலரால் கண்டுபிடிக்க முடியாத இடம் கண்ணாடிதான். மக்கள் முகம் பார்க்கும் கண்ணாடி என்று நினைக்கும் அதன் பின்னால் ரகசிய கேமராக்களை பொறுத்திவிட்டு காட்சிகளை பதிவு செய்வது வாடிக்கையாக இருக்கிறது. கண்ணாடிக்கு பின் கேமராக்கள் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எளிது.

கண்ணாடியில் கண்டுபிடிப்பது எப்படி?
உங்களின் ஒரு விரலை எடுத்து கண்ணாடியை தொட வேண்டும். உங்கள் விரலுக்கும் கண்ணாடியில் தெரியும் அதன் பிரதிபலிப்பிற்கும் இடையில் இடைவெளி இருந்தால் அது சாதாரணமான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இருந்தால் அது இருபுறமும் பார்க்கும் கண்ணாடியாகும். அதன் பின்னால் கேமராவை மறைத்து வைக்க முடியும்.

தொலைக்காட்சி பெட்டிகள்
தற்போது பல அறைகளில் எல்.இ.டி. தொலைக்காட்சிகளும் வைக்கப்படுகின்றன. இதற்கு உள்ளேயோ அல்லது செட்டாப் பாக்ஸ் உள்ளேயோ கேமராக்களை பொறுத்த முடியும். பலராலும் அதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், செல்போன் பிளாஷ் லைட்டை வைத்து அதை அறிந்துகொள்ளலாம். டிவி, செட்டாப் பாக்ஸ்களில் பிளாஷ் லைட்டை அடித்து பார்க்க வேண்டும். அதில் நீளம் அல்லது வயலெட் நிறத்தில் ஏதாவது தெரியும்பட்சத்தில் அதில் கேமரா இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதை கவனமாக உற்று நோக்க வேண்டும்.

அலங்கார பொருட்கள்
நாம் ஏற்கனவே சொன்னதைபோல் அறைகளில் உள்ள அலங்கார பொருட்களில் கேமராக்களை எளிதில் மறைத்து வைத்துவிடுகிறார்கள். அறைகளில் உள்ள ஸ்பீக்கர்கள், கடிகாரம், பூந்தொட்டிகள், நாற்காளி, கட்டில் போன்ற அறைகலன்கள் அல்லது வேறு சில அலங்கார பொருட்களில் கேமராக்கள் இருக்கலாம். ஒவ்வொன்றையும் தேடினால் நாம் எளிதில் கேரமாவை கண்டுபிடித்துவிட முடியும்.

நைட் விஷன் கேமரா
அதேபோன்று அனைத்து அறைகளிலும் இருக்கக்கூடிய பிளக் பாய்ண்டுகள், தலை முடியை காய வைக்க பயன்படும் டிரையர்கள், தீ எச்சரிக்கை பட்டன்களில் கேமராக்களை எளிதில் மறைத்து வைக்க வாய்ப்புகள் உள்ளன. பாத்ரூம் ஷவர்களிலும் அது இருக்கலாம். அவற்றை கண்டுபிடிக்க அனைத்து விளக்குகளையும் அனைத்துவிட்டு நைட் விஷன் கேமராவை கொண்டு பார்க்க வேண்டும். மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமராவில் இருந்து ஒளி வெளியாவதை எளிதில் கண்டுபிடிக்கலாம்.












Click it and Unblock the Notifications