டிக் அடிக்க போகும் ஸ்டாலின்.. "அந்த 3 பேர்" யார்? டெல்லியிலிருந்து "அவரே" வருகிறாராமே! பயங்கர ரேஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் 3 முக்கியமான போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் நிலையில், அவர்களின் இடத்தில் நியமிக்கப்பட போகும் அதிகாரிகள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு போலீசார் வட்டாரத்தில் இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறைத்துறை டி.ஜி.பி சுனில்குமார் சிங் நேற்று ஓய்வு பெற்றார். அதேபோல் சி.பி.சி.ஐ.டி பிரிவு டி.ஜி.பி ஷகீல் அக்தர் நேற்று ஓய்வு பெற்றார். இதில் சி.பி.சி.ஐ.டி பிரிவு டி.ஜி.பி ஷகீல் முக்கியமான பல வழக்குகளை விசாரித்து வந்தார்.

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி கைக்கு சென்றுள்ள நிலையில் வழக்கு விசாரணை கோணம் அப்படியே மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ்

போலீஸ்

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஷகீல் இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு வாரமாக பல்வேறு விசாரணைகளை நடத்தினார். ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கோடநாடு விசாரணையில் நேரடியாக சில வாக்குமூலங்களை ஷகீல் பெற்றார்.

சிபிசிஐடி

சிபிசிஐடி

அதேபோல் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர் விசாரணையை நடத்தி வந்தார். சிபிசிஐடி பிரிவிற்கு வரும் முன் பல்வேறு முக்கிய பிரிவுகளில் இவர் பணியாற்றி வந்தார். டிஐஜி, ஐஜி, டிஜிபியாக பல்வேறு பிரிவுகளில் இவர் வேலை பார்த்து உள்ளார். அழகிரி அமைச்சராக இருந்த போது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாகவும் கூட இவர் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் நேற்று இவர் ஓய்வு பெற்றார்.

வழக்கு

வழக்கு

அதேபோல் நேற்று சிறைத்துறை டி.ஜி.பி சுனில்குமார் சிங் நேற்று ஓய்வு பெற்றார். பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாகவும் டிஐஜியாகவும் இவர் பணியாற்றி உள்ளார். அதேபோல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் இவர் பணியற்றி உள்ளார். இவரும் ஓய்வு பெற்றுள்ளதால் இரண்டு முக்கியமான பொறுப்புகள் காலியாகி உள்ளன. அதேபோல் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.

மாற்றம்

மாற்றம்

தமிழ்நாட்டின் 3 முக்கியமான போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் நிலையில், அவர்களின் இடத்தில் நியமிக்கப்பட போகும் அதிகாரிகள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு போலீசார் வட்டாரத்தில் இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் யாரை தேர்வு செய்வார், யாருக்கு டிக் அடிப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பல மூத்த அதிகாரிகளுக்கு இடையில் இதற்கான ரேஸ் ஏற்பட்டு உள்ளது.

நியமனம்

நியமனம்

சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி பதவிதான் இதில் முக்கியமானது ஆகும். மகேஷ் குமார் அகர்வால், அமல்ராஜ் ஆகியோர் இடையே இதற்கான போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங் சி.பி.சி.ஐ.டி பிரிவு டி.ஜி.பியாக நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சிறைத்துறை டி.ஜி.பி சுனில்குமார் சிங் இடத்தில் ஆபாஷ் குமார், அமரேஷ் புஜாரி இருவரில் ஒருவர் நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

 பிரஜ் கிஷோர் ரவி

பிரஜ் கிஷோர் ரவி

அல்லது பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த போட்டி தற்போது கவனம் பெற்றுள்ளது. சிபிசிஐடி பிரிவு கோடநாடு வழக்கு பல முக்கிய வழக்குகளை விசாரிப்பதால் அந்த இடத்தை நிரப்ப போகும் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய பணியில் உள்ள மகேஷ்வர் தயாளை டெல்லியில் இருந்து தமிழ்நாடு கொண்டு வந்து இந்த மூன்று பதவிகளில் ஒன்றை வழங்க முதல்வர் ஸ்டாலின் முயன்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+