சென்னை அருகே பயங்கரம்- மனைவியின் நடத்தையில் சந்தேகம்-கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன்!
சென்னை : சென்னையை அடுத்த குன்றத்தூரில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சதேகத்தால், அவரை கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் அடுத்த கலெடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தனியார் நிறுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அலமேலு என்பவர், முன்னாள் பள்ளி ஆசிரியை ஆவார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவியின் மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு, ரமேஷ் தகராறில ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஒரு வாரத்துக்கு முன்பு அயனாவரத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு அலமேலு சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து சமாதானம் பேசி நேற்று முன்தினம்தான் மனைவியை வீட்டுக்கு ரமேஷ் அழைத்து வந்துள்ளார்.

வீட்டுக்கு மனைவியை அழைத்து வந்த போதிலும் ரமேஷ் மனதில் சந்தேகத் தீ தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மகள்கள் இருவரும் வழக்கம்போல கல்லூரிக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் ரமேஷ் - அலமேலு தம்பதியர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த கடப்பாரையால் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அலமேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்து நேரடியாக குன்றத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்ற ரமேஷ், தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாகக் கூறி சரண் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் தரப்பில் கூறும்போது, ரமேஷ், தனது மனைவியின் மீதான சந்தேகத்தால் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. மனைவி மீது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இந்த கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications