அன்புக்கு நன்றி...நலமாக இருக்கிறேன்..கவலை வேண்டாம் - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன் என்று டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: நான் நலமாக இருக்கிறேன் என்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன்.
பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 82 தனது மனைவி சரஸ்வதி அம்மாளுடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வசித்து வருகிறார்.
டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொண்டர்களை சந்தித்து வந்தார்.

ராமதாஸ்க்கு உடல் நலம் பாதிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமதாசுக்கு திடீரென தொண்டைவலி ஏற்பட்டது. இதையடுத்து சோர்வுடன் காணப்பட்ட ராமதாஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். கொரோனா தொற்று பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தனிமைப்படுத்திக்கொண்ட ராமதாஸ்
அதைத்தொடர்ந்து ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

நலமடைய வாழ்த்து
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் பலரும் நலம் விசாரித்தனர். இந்த நிலையில் தனது நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

ராமதாஸ் ட்வீட்
கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது!
Recommended Video

நலமாக இருக்கிறேன்
நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications