சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஓபிஎஸ்ஸை அழைத்திருப்போம்".. எடப்பாடி தரப்பின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றிய திமுக அமைச்சரின் பதில்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பென்னிகுயிக் விழா நடந்திருந்தால் ஓ பன்னீர் செல்வத்தை அழைத்திருப்போம் என லண்டனில் இருந்து திரும்பிய அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் விவசாயத்திற்காகவும் முல்லை பெரியாறு அணையை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொறியாளர் பென்னி குயிக் தனது சொந்த செலவில் கட்டினார்.

இந்த அணை மூலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த அணை இன்று வரை கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது.

விடுவாரா எடப்பாடி.. அதிமுக அலுவலக சாவி யாருக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு விறுவிறு வாதம்விடுவாரா எடப்பாடி.. அதிமுக அலுவலக சாவி யாருக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு விறுவிறு வாதம்

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

அந்த அணையை கட்டிய பொறியாளர் பென்னி குயிக்கிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு பிரிட்டன் கேம்பர்ளி நகரில் உள்ள பூங்காவில் பென்னியின் சிலை திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த சிலையை செப்டம்பர் 10 ஆம் தேதி திறக்க முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

 அமைச்சர் ஐ பெரியசாமி

அமைச்சர் ஐ பெரியசாமி

சிலையை திறக்க தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி லண்டன் சென்றிருந்தார். அவருடன் 5 எம்எல்ஏக்களும் லண்டன் சென்றிருந்தனர். இந்த நிலையில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானதால் பென்னியின் சிலை திறப்பு விழா நடைபெறவில்லை. இதனால் அமைச்சர் ஐ பெரியசாமி லண்டனிலிருந்து சென்னை திரும்பினார்.

பென்னிகுயிக்

பென்னிகுயிக்

அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பென்னிகுயிக்கின் சொந்த ஊரில் சிலை அமைக்க சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் விவசாய தேவைகளுக்காகவும் தனது சொந்த பணத்தை கொண்டு முல்லை பெரியாறு அணையை உருவாக்கினார் பென்னி குயிக்.

பென்னிக்கு பெருமை

பென்னிக்கு பெருமை

இதனால்தான் அவரது பெருமையை அவரது சொந்த ஊரிலேயே பறைசாற்றும் விதமாக அவருக்கு சிலை அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். இந்த நிலையில் லண்டன் கேம்பர்ளியில் பென்னிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிறை திறப்பு விழா மக்கள் பார்வையிடும் வகையில் உள்ளது.

ஓபிஎஸ்ஸையும் அழைத்திருப்போம்

ஓபிஎஸ்ஸையும் அழைத்திருப்போம்

என்னுடன் 5 எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். லண்டனில் சிலை திறப்பு விழா என்பதாலேயே ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இதே பென்னி குயிக்கின் சிலை திறப்பு விழா தமிழகத்தில் நடந்திருந்தால் ஓ பன்னீர் செல்வத்திற்கு நிச்சயம் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும். மேலும் என்னுடன் வந்த 5 எம்எல்ஏக்களும் அவர்களது சொந்த செலவில் லண்டன் வந்தார்கள் என்றார் பெரியசாமி. திமுகவின் கைக்கூலி என ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி தரப்பு விமர்சித்து வரும் நிலையில் ஐ பெரிய சாமியின் இந்த கருத்து அவர்கள் காதில் ஈயம் கரைத்து ஊற்றியது போல் இருக்கும். எனினும் தேனி மாவட்ட சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸை அழைத்திருப்பேன் என்று ஐ பெரியசாமி கூறியிருந்திருக்கலாம்.

English summary
Minister I Periyasamy says that if Penny cuick's statue inauguration in TN, then OPS would have been invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X