சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: 2 நாட்களில் ஹாஸ்டலை காலி செய்யச் சொல்லும் சென்னை ஐஐடி - தவிக்கும் மாணவர்கள்

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இரண்டு நாட்களுக்குள் விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் இரண்டு நாட்களுக்குள் அறைகளை காலி செய்ய வேண்டும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் மாணவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். விடுதிகளில் தங்கியிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே அனைவரும் விடுதிகளை விட்டு இரண்டு நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க கடந்த 3 மாதகாலமாக நாடு முழுவதும் ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்துகள் மூலமாக சென்று விட்டனர். பலர் கால்நடையாக பயணித்து விட்டனர்.

IIT Madras asks students to vacate hostel premises

கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி விடுதிகளிலும் பல கல்வி நிறுவனங்களில் தங்கியிருப்பவர்களும் விடுதிகளிலேயே பாதுகாப்பாக தங்கி விட்டனர்.

சென்னை ஐ.ஐ.டி.யைப் பொறுத்தவரை, ஊரடங்கு காலத்துக்கு முன் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் சூழல் சரியாகும் வரை தொடர்ந்து தங்கியிருக்க ஐ.ஐ.டி. நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த சூழ்நிலையில்தான் ஐஐடி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் அடுத்த இரு தினங்களுக்குள்ளாக விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்றும், விடுதிகளை விட்டு மாணவர்கள் வெளியேறாவிட்டால், அவர்கள் வெளியேற்றப்படுவர் என்றும் ஐ.ஐ.டி. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு
மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விடுதிகளில் தங்கியிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே அனைவரும் விடுதிகளை விட்டு இரண்டு நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிதீவிரம்- 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம் இந்தியாவில் அதிதீவிரம்- 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம்

காஷ்மீர் தொடங்கி, உத்தரபிரதேசம், குஜராத், மேகாலயா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை ஐஐடியில் தங்கி படித்து வருகின்றனர். இப்போது ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் விடுதிகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால் சொந்த ஊருக்கு போக முடியாத நிலையில் உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான ஏற்பாடுகளை ஐஐடி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பேராசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
IIT Madras has asked its students to vacate hostels in next couple of days as coronavirus continues to spread rapidly in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X