தாதாசாகேப் பால்கே விருது.. இளையராஜாவை இழுத்துவிட்ட வைரமுத்து
சென்னை : நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ள வைரமுத்து, கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா ஆகியோரும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தகுதி உடையவர்கள் என்று மத்திய அரசுக்கு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு இந்திய அரசால் தரப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்த விருது 1969ம் ஆண்டு முதல் தரப்படுகிறது . முதல் விருது நடிகை தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ரஜினிக்க முன்பு இதுவரை இந்த விருதினை இரண்டு பேர் தான் வாங்கி உள்ளார்கள். நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1996ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன்பிறகு 2010ம் ஆண்டு ரஜினியின் குருநாதர் ஆன இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு சரியாக 9 வருடங்கள் கழித்து 2019ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாதா சாகேப் பால்கே
2019ம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்ட போதும், கொரோனா பெருந்தொற்று காரணமாக விருது எப்போது வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதினை குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

கே பாலச்சந்தர்
இந்த விருது வாங்கிய பின்னர் ரஜினிகாந்த், மேடையில் கூறும் போது, அனைவருக்கும் காலை வணக்கம், கவுரவமிக்க இந்த விருதைப் பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த தாதா சாஹேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை எனது வழிகாட்டி, எனது குரு கே பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அதிக நன்றியுணர்வுடன் அவரை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

நடிப்பு திறன்
எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்குப் போதித்தவர், அவரை நினைத்துப் பார்க்கிறேன். கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பேருந்து ஓட்டுநர், என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன். நான் நடத்துநராக இருந்தபோது ராஜ்பகதூர் தான் என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டார். திரைத்துறையில் நான் சேர மிகவும் ஊக்கம் கொடுத்தார்.

தமிழ் மக்களுக்கு நன்றி
எனது படங்களைத் தயாரித்த, இயக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன். தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்." இவ்வாறு கூறினார்.

இளையராஜா
இந்நிலையில் : நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ள வைரமுத்து, தமிழகத்தில் மேலும் பல கலைஞர்கள் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தகுதி உடையவர்கள் உள்ளார்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "தாதா சாகேப் பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த்; ஊர்கூடி வாழ்த்துவோம்". "கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா" என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்" என கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். தாதா சாகேப் பால்கே விருது பெரும்பாலும் பாலிவுட் கலைஞர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அரிதிலும் அரிதாகவே தென்னிந்திய கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications