Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர்கள் சூர்யா, கார்த்தி போல் இளையராஜா மறைமுக அரசியல்வாதி இல்லை - நடிகை காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் கார்த்தி, சூர்யா போல் மத்திய அரசு ஆட்சி பற்றி பொய்யை விமர்சிக்கும் மறைமுக அரசியல்வாதி இளையராஜா இல்லை என பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

மோடியை இளையராஜா பாராட்டியதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகின.

திமுகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், இயக்குநர் மாரி செல்வராஜ் போன்றோர் இளையராஜாவின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். மறுபக்கம் பாஜகவினர் இளையராஜாவின் கருத்தை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜே.பி.நட்டா அறிக்கை

ஜே.பி.நட்டா அறிக்கை

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "இந்தியாவின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்துக்கள் ஒரு கட்சிக்கும் அதன் கூட்டணிகளுக்கும் விருப்பமில்லாத வகையில் இருந்ததால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தொடர்ந்து வார்த்தைகளால் அவரை கும்பலாக இழிவுபடுத்தி வருகின்றனர். இதுதான் ஜனநாயகமா? ஒருவர் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் மகிழ்ச்சியாக வாழலாம். ஏன் அவர்களை அவமானப்படுத்த வேண்டும்?" எனக்கேட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் கருத்து

காயத்ரி ரகுராம் கருத்து

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜே.பி.நட்டாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நன்றி. இளையராஜா சார் முன்னுரை முற்றிலும் வரவேற்கத்தக்கது. அவர் மற்ற கட்சிகளை விமர்சிக்கவில்லை.

நடிகர் சூர்யா குறித்து விமர்சனம்

நடிகர் சூர்யா குறித்து விமர்சனம்

நடிகர் கார்த்தி, சூர்யா என ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்சிகாக மற்றும் மத்திய அரசு ஆட்சி பற்றி பொய்யை விமர்சிக்கும் போன்ற மறைமுகம் அரசியல்வாதி அல்ல இளையராஜா சார். இளையராஜா சார் அரசியல் கட்சிக்காக பேசுவதற்கு ஒரு அறக்கட்டளையை நடத்தவில்லை, அவர் பாஜகவுக்கு வாக்கு கேட்டதில்லை. நமது பிரதமர் மோடியின் கனவு அம்பேத்கரின் கனவை போன்றது அவரே உத்வேகம், நல திட்டங்கள் மூலம் மோடி ஜி நிறைவேற்றுகிறார்.இளையராஜா சார் வழி மொழிகிறார். பொய்க்கு கருத்து சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது ஏன் உண்மைக்கு அனுமதி இல்லை?

என்னதான் சொன்னார் இளையராஜா?

என்னதான் சொன்னார் இளையராஜா?

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், "அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயன்று இருக்கிறது.

சமூக நீதி சட்டங்கள்

சமூக நீதி சட்டங்கள்

சமூக நீதியை எடுத்துக் கொண்டால், பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததன் மூலமாக சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சட்டரீதியாக பாதுகாப்பை வழங்கி இருக்கிறார். வீடுகள் கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்ததுடன் ஏழைகளின் வாழ்க்கையையும் முன்னேற்றி இருக்கிறார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு

பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்து இருப்பதால் கிராமபுற பெண்கள் படிப்பை தொடர முடியும். இலவச எரிவாயு திட்டம், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.

Recommended Video

    Ilayaraja-க்கு ராஜ்யசபா எம்பி பதவி? BJP போடும் திட்டம்.. இதுதான் காரணமா?
    அம்பேத்கரும் மோடியும்

    அம்பேத்கரும் மோடியும்

    அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி." என குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+