அந்தமான் கடலில் ஏப்.7ல் காற்றழுத்த தாழ்வு பகுதி! 2 நாள் மீனவர்களுக்கு எச்சரிக்கை!மழைக்கு வாய்ப்பு
சென்னை: தெற்கு அந்தமான் கடல், அதனையொட்டிய வங்கக்கடலில் ஏப்ரல் 6ல் மேலடுக்கு சுழற்சி உருவாகி 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மாறலாம் என்பதால் 2 நாட்களும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கூட மதிய வெயில் மண்டையை பிளந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அக்னி நட்சத்திரமே இன்னும் வரவில்லை. அதற்குள் இப்படியா சூரியன் சுட்டெரிப்பது என எரிச்சலடைகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி
மேலும் கோடை மழை கொட்டி தீர்க்காத என பேசி வருகின்றனர். இந்நிலையில் தான் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தெற்கு அந்தமான் கடல், அதனையொட்டிய வங்கக்கடலில் ஏப்ரல் 6ல் மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதன்பின் 24 மணிநேரத்தில் அதாவது ஏப்ரல் 7ல் தென்கிழக்கு வங்ககடலில் ஏப்ரல் 7ல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் அந்தமான் பகுதியில் 60 கிலோமீட்டர் தூரம் வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே ஏப்ரல் 6ல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கும், 7ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை எங்கெங்கு
மேலும் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் இடங்கள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, தமிழக பகுதிகளில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கீழடுக்கு சுழற்சி காற்று விசை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையைம் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் மழை
தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக தேவக்கோட்டையி்ல 8 சென்டிமீட்டர், அம்பாசமுத்திரத்தில் 6 சென்டிமீட்டர், பேச்சிபாறை, தஞ்சாவூரில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் கொஞ்சம் தனித்து இருந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications