சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டேட்டா இழப்பு".. கடைசி நேரத்தில் குழப்பம்.. எஸ்எஸ்எல்வி அனுப்பிய சாட்டிலைட்டுகளுக்கு என்ன ஆனது?

Google Oneindia Tamil News

சென்னை: இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதா என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் டேட்டாவை பெறுவதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Recommended Video

    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட SSLV-D1/EOS-02 | ISRO

    இஸ்ரோ மூலமாக இன்று எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. எஸ்எஸ்எல்வி என்பது பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிவற்றின் சிறிய ரக ராக்கெட் ஆகும். இதன் பெயரே எஸ்எஸ்எல்வி அதாவது சாட்டிலைட்டுகளை ஏவும் சிறிய அளவிலான ராக்கெட்.

    SSLV-D1/EOS-02 ராக்கெட்தான் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கியது. முதல் முறையாக SSLV மூலம் இஸ்ரோ சாட்டிலைட்டை விண்ணிற்கு அனுப்பி உள்ளது.

    புதிய சரித்திரம் படைத்த இஸ்ரோ.. முதல்முறையாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்! புதிய சரித்திரம் படைத்த இஸ்ரோ.. முதல்முறையாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்!

    எஸ்எஸ்எல்வி

    எஸ்எஸ்எல்வி

    இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் 34 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது பிஎஸ்எல்வியை விட 10 மீட்டர் உயரம் குறைவானது. இதன் ஆரம் 2 மீட்டர் ஆகும். பிஎஸ்எல்வி ஆரம் 2.8 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எடை 120 டன். இதன் மூலம் 500 கிலோ கொண்ட செயற்கைகோள்களை விண்ணிற்கு கொண்டு செல்ல முடியும். அதிகபட்சம் 500 கிலோ மீட்டர் வட்ட பாதையில் செயற்கைக்கோளை இது வட்டப்பாதையில் நிறுத்த முடியும்.

    சிறிய ராக்கெட்

    சிறிய ராக்கெட்

    இந்த நிலையில் இன்று இரண்டு செயற்கைகோள்களை இந்த எஸ்எஸ்எல்வி விண்ணிற்கு சுமந்து சென்றது. அதில் ஒன்று அரசு பள்ளி மாணவிகள் 750 பேர் சேர்ந்து உருவாக்கிய செயற்கைகோள் ஆகும். 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு இந்த செயற்கைகோள் பள்ளி மாணவிகள் மூலம் உருவாக்கப்பட்டது. இதற்கு ஆசாதி சாட் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. EOS-02 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும் இதில் விண்ணில் அனுப்பப்பட்டது.

     பூமி

    பூமி

    இந்த EOS-02 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள். பூமியின் வெப்பநிலை, வானிலை ஆகியவற்றை இது ஆய்வு செய்யும். மாணவிகள் உருவாக்கிய ஆசாதி சாட் 8 கிலோ எடை கொண்டது. இதில் மொத்தம் 75க்கும் அதிகமான வெவ்வேறு சிறிய கருவிகள் உள்ளன. இவை எல்லாம் தலா 50 கிராம் எடை கொண்டது. வானிலை சோதனை உள்ளிட்ட பல விஷயங்களை இந்த 75 பொருட்கள் ஆய்வு செய்யும். இந்தியா முழுக்க 75 அரசு பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட்டனர். Space Kidz India என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் இவர்கள் செயற்கைக்கோளை உருவாக்கினர்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    Space Kidz India மூலம் உருவாக்கப்பட்ட கிரவுண்ட் சென்டர் இந்த செயற்கைகோள் அனுப்பும் தகவல்களை ஆய்வு செய்யும். இந்த இரண்டு செயற்கைகோள்களை சுமந்து கொண்டு எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் 3 ஸ்டேஜும் இன்று வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். ஆனால் 2 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

     குழப்பம்

    குழப்பம்

    3 ஸ்டேஜ் முடிந்து செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டதும் அதன் டேட்டா பூமிக்கு வர வேண்டும். ஆனால் வட்ட பாதையில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும் முன் டேட்டா பகிர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டேட்டாவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டேட்டா இழப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்., 2 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதா என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    English summary
    In the SSLV-D1 terminal phase of the mission, some data loss is occurring. The final outcome of the mission with about the stable orbit is yet to be confirmed: ISRO chairman S. Somanath. இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதா என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் டேட்டாவை பெறுவதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X