பல வருட கோரிக்கை.. ஒரே கையெழுத்து.. மனம் குளிர்ந்த அரசு ஊழியர்கள்.. தமிழக அரசின் மாஸ்டர் ஸ்டிரோக்!
தமிழக அரசின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சென்னை: தமிழக அரசின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழகம் முழுக்க கொரோனா தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் நிர்வாக ரீதியாகவும் நிறைய முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்தது தொடங்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும் அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில்தான் நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும், பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் ஓய்வு வயதும் இனி 59 ஆகும்.

பல வருட கோரிக்கை
தமிழக அரசின் இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அரசு பொதுத்துறை ஊழியர்கள் பல வருடமாக வைத்து வந்த கோரிக்கை ஆகும் இது. அதேபோல் அரசு ஆசிரியர்களும் தங்களின் ஓய்வு வயதை உயர்த்தும்படி கோரிக்கை வைத்து இருந்தனர். இத்தனை நாள் கோரிக்கையை எந்த விதமான போராட்டமும் இன்றி மிக அமைதியாக தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இது வெளியாகி உள்ளது.

பணியாற்ற வாய்ப்புள்ளது
இதன் மூலம் அரசு பொதுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் மேலும் ஒரு வருடம் வேலை பார்க்க முடியும். இதனால் அவர்களின் பொருளாதார தேவை பெரிய அளவில் ஈடுகட்டப்படும். தங்கள் குடும்பத்தை கவனிக்கவும், வீட்டில் விழாக்களை நடத்தவும் இந்த ஒரு வருட நீட்டிப்பு மேலும் உதவும். இந்த அறிவிப்பு பல ஆயிரம் ஊழியர்களின் வாழ்க்கையில் பெரிய வெளிச்சமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் நேற்றில் இருந்தே இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று வருகிறார்கள்.

பொருளாதார நிலை
முக்கியமாக கொரோனா காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்கள் இப்போதே பணி நீக்கத்தை தொடங்கிவிட்டது. அடுத்த சில மாதங்கள் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்படும் நிலை உள்ளது. மக்களுக்கு பெரிய அளவில் பண தேவை ஏற்படும். பணம் இருந்தாலும் பொருள் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும். இப்படி இருக்கும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கனவு கலைத்தது
பொருளாதார சரிவு ஏற்பட்டு இருக்கும் நிலையில் பணி நீட்டிப்பு என்பது ஆச்சர்யமான விஷயம். இது பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவும். அடுத்த வருடம் எப்படி சமாளிக்க போகிறோம், எப்படி குழந்தைகள் திருமணத்தை செய்ய போகிறோம் என்று அச்சமடைந்த கொண்டு இருந்த நபர்களுக்கு இந்த அறிவிப்பு கண்டிப்பாக நிம்மதி அளிக்கும். இன்னும் ஒரு வருடம் கவலையின்றி இவர்கள் பணியாற்ற முடியும்.

வேறு ஒரு வகையில் நிம்மதி
அதேபோல் இன்னொரு பக்கம் அரசு பொருளாதார சரிவு காரணமாக எங்கே தங்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவோமோ என்று பலரும் சந்தேகம் அடைந்து கொண்டு இருந்தனர். தனியாரில் இருக்கும் பணி நீக்கம் போலவே செலவை கட்டுப்படுத்துவதற்காக அரசு வேலையிலும் பணி நீக்கம் வந்துவிடுமோ என்று கவலையில் இருந்தனர். சில இளம் அரசு ஊழியர்கள் கூட இந்த கவலையில் இருந்தனர். மூத்தவர்களுக்கான இந்த பணி நீட்டிப்பு தற்போது இளம் ஊழியர்களின் அச்சத்தை போக்கி உள்ளது.

நிதி சுமை
அரசுக்கு ஏற்கனவே அதிக அளவில் கொரோனா ஊரடங்கு மற்றும் மருத்துவ செலவு காரணமாக நிதி சுமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதி சுமைக்கு இடையிலும் அரசு இந்த பணி நீட்டிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி நிதிச்சுமையை பெரிய அளவில் கருத்தில் கொள்ளாமல் துணிச்சலாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசியல் ரீதியாக அவருக்கு இந்த ஒரு உத்தரவு பெரிய வரவேற்பை தேடித்தரும் என்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications