சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடச்சே என்ன இது? அவரை வேலையைவிட்டு தூக்குங்க.. இந்திய வீரர்கள் செய்த காரியம்.. கொதிக்கும் பேன்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை; நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டி 20 போட்டியிலும் இந்திய வீரர்களின் பீல்டிங் மிக மோசமாக அமைந்து உள்ளது.

ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது ஆர். ஸ்ரீதர் இந்திய அணியில் பீல்டிங் கோச்சாக இருந்தார். இவரின் பயிற்சிக்கு கீழ் இந்திய அணி வீரர்கள் மிக சிறப்பாக பீல்டிங் செய்தனர்.

அணியின் பீல்டிங் இவரின் பயிற்சிக்கு கீழ் உலகத்தரமானது. இந்த நிலையில்தான் தற்போது தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கீழ் புதிய பயிற்சியாளர் குழு இந்திய அணியில் இணைந்துள்ளது.

இப்படி நடந்திருக்க கூடாது.. கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2 சம்பவங்கள்.. ரசிகர்கள் சோகம்! இப்படி நடந்திருக்க கூடாது.. கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2 சம்பவங்கள்.. ரசிகர்கள் சோகம்!

புதிய குழு

புதிய குழு

அதன்படி இந்திய அணியின் பீல்டிங் கோச்சாக டி திலீப் செயல்பட்டு வருகிறார். பவுலிங் கோச்சாக பராஸ் பாம்ப்ரே, பேட்டிங் கோச்சாக விக்ரம் ரதஹதோர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு இன்னும் பிசிசிஐ சார்பாக அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இவர்களின் பதவி ஏற்பு உறுதியாகவில்லை.

உறுதி இல்லை

உறுதி இல்லை

இந்த நிலையில்தான் இந்திய பீல்டர்கள் கடந்த இரண்டு போட்டிகளாக மோசமாக பீல்டிங் செய்து வருகிறார்கள். முக்கியமான நேரத்தில் பந்தை தடுக்க முடியாமல் மிஸ் செய்கிறார்கள். பல இடங்களில் மிஸ் பீல்டிங் செய்கிறார்கள். சில இடங்களில் ரன் அவுட் செய்ய முடியாமல் ஓவர் த்ரோ கொடுக்கிறார்கள்.

முதல் போட்டி

முதல் போட்டி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில், ரோஹித் மிஸ் செய்த ரன் அவுட், அக்சர் பட்டேல் விட்ட கேட்ச், பல பீல்ட்களை மிஸ் செய்தது என்று இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. அதேபோல் பல இடங்களில் இந்திய பீல்டர்கள் மோசமாக பீல்ட் செய்து அதிகமாக ரன் கொடுத்தனர்.

இன்று

இன்று

இன்றைய போட்டியிலும் முதல் ஓவரில் குப்தில் 8 ரன்கள் இருந்த போதே ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். குப்தில் அடித்த பந்தை ராகுல் கேட்ச் பிடிக்காமல் மிஸ் செய்தார். அதன்பின் அதிரடி காட்டிய குப்தில் 20 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். இன்றும் பீல்டிங் மோசமாக இருந்தது.

காரணம்

காரணம்

இதற்கு பந்து ஈரமாகி வலுக்குவதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதே சமயம் பீல்டிங் கோச் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பீல்டிங் கோச் யார் அவரை உடனே வேலையை விட்டு தூக்குங்கள் என்று பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

பீல்டிங்

பீல்டிங்


இந்திய அணியா இது? பீல்டிங் இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். பலர் கேட்ச் விட்டால் மேட்ச் விட்ட மாதிரி. உடனே பீல்டிங் கோச்சை மாற்றுங்கள் இல்லையென்றால் பீல்டர்களுக்கு வேறு விதமான பயிற்சிகளை வழங்குங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

English summary
Ind vs NZ: Team India fielding is not good in second match also against New Zealand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X