பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது!
சென்னை: ஈரான் போர் காரணமாக நாம் எல்லோரும் எல்பிஜி கேஸ், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஓரிரு மாதங்களில் இதைவிட பெரிய பிரச்சனையில் இந்தியா சிக்கப்போகிறது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்நிய செலாவணி கையிருப்புதான் அந்த பிரச்சனை. அமெரிக்காவின் உத்தரவை கேட்டு, ரஷ்யாவிடம் ரூபாயில் வாங்கிய கச்சா எண்ணெய்யை மத்திய அரசு நிறுத்திவிட்டு, அமெரிக்க டாலர் கொடுத்து.. வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய்யை வாங்க தொடங்கியது.

காத்திருக்கும் பிரச்சனை
தொடர்ந்து எண்ணெய் வாங்க வேண்டும் எனில், அமெரிக்க டாலர் அவசியம். நம்மிடம் தற்சயம் 700 பில்லியன் அளவுக்குதான் அமெரிக்க டாலர் கையிருப்பு இருக்கிறது. இதை வைத்து 7-8 மாதங்கள் வரைதான் காலம் தள்ள முடியும். சரி நாம் தினமும்தானே வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். அதன் மூலம் வருவாய் கிடைத்துக்கொண்டேதான் இருக்கப்போகிறதே! என்று கேட்கலாம். இந்த ஏற்றுமதிக்குதான் அமெரிக்கா தற்போது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவை நம்பி..
சும்மா இருந்த ஈரானை, இஸ்ரேல் பேச்சை கேட்டுக்கொண்டு அமெரிக்கா அட்டாக் செய்ய, பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற வெளியுறவு விஷயங்களில் இந்தியா அணிசேரா கொள்கையைதான் கடைபிடிக்கும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமெரிக்க ஆதாரவு நிலைப்பாட்டை எடுத்து ஈரானை பகைத்துக்கொண்டது. இது நம்முடைய ஏற்றுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்றுமதிக்கு பாதிப்பு
அமெரிக்காவுக்கு அடுத்து இந்திய பொருட்கள் அதிகம் செல்லும் இடம் வளைகுடா நாடுகள்தான். நம்முடைய மொத்த ஏற்றுமதியில் 15-18% வரை வளைகுடா நாடுகளுக்குதான் செல்கிறது. இந்தியாவின் பொருட்கள் இந்த நாடுகளுக்கு போக வேண்டும் எனில், ஹர்முஸ் நீரிணைதான் ஒரே வழி. இந்த வழியை ஈரான் அடைத்திருக்கிறது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே டிரம்ப் போட்ட வரி விஷயம் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தது.
உண்யைமான பிரச்சனை
இப்போது ஈரான் போர் காரணமாக, இந்த ஏற்றுமதி இன்னும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, 915 பில்லியன் டாலர் இற்குமதி 821 பில்லியன் டாலர் ஏற்றுமதி என இருக்கிறது. இதில் வர்த்தக பற்றாக்குறை 94 பில்லியன் டாலர். இந்திய ஏற்றுமதியில் 18% என்பது அமெரிக்காவை நம்பிதான் நாம் இருக்கிறோம். ஆனால் வரி பஞ்சாயத்து காரணமாக இந்த 18%ல் 40% வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் ஈரான் போர் காரணமாக நம்முடைய உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதெல்லாம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை கடித்திருக்கிறது. இன்னும் ஓரரு மாதங்களில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும். இதற்கு முழு காரணம் டிரம்பும், அவரை நம்பியிருக்கும் மத்திய அரசும்தான் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்.. வளைகுடா நாடுகளை விட்டு வர மறுக்கும் இந்தியர்கள்! உருக்கமான பின்னணி -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே












Click it and Unblock the Notifications