"சாதிவெறி பிசிசிஐ".. ஸ்கை, சாம்சன், நடராஜன் எங்கே? கொதித்தெழுத்த ரசிகர்கள்! டிரெண்டாகும் ஹேஷ்டேக்
சென்னை: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறாததை விமர்சித்தும், உயர்சாதியினருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கூறி #Casteist_BCCI என்ற ஹேஷ்டேகின் கீழ் ட்விட்டரில் லட்சக்கணக்கானோர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு, தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேர்வுக்குழுவை மொத்தமாக கலைத்தது பிசிசிஐ.
இந்த தொடர் முடிந்த கையோடு நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

தொடரை வென்ற இந்தியா
2வது போட்டியில் இந்திய அணி வென்றது. 3 வது போட்டியின்போதும் மழை குறுக்கிட்டதால் அப்போட்டி சமனில் முடிவடைந்ததாகவும், இதன் மூலம் இந்தியா தொடரை வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் 2 வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளாசிய அசத்தல் சதம் உலக கிரிக்கெட் வீரர்கள் பலரால் வியந்து பாராட்டப்பட்டது.

அசத்தும் சூர்யகுமார் யாதவ்
ஆசியக்கோப்பை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், உலகக்கோப்பை டி20 தொடர் என அனைத்திலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த அவர், நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாகவும் உள்ளார்.

வங்கதேச தொடர்
இந்த நிலையில் அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது. வங்கதேசத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான முதல் தர அணியும், நியூசிலாந்து தொடரில் தவான் தலைமையிலான 2 ஆம் தர அணியும் விளையாடுகிறது.

ஸ்கை எங்கே?
இதில் வங்கதேச தொடரில் விளையாடும் மாற்றியமைக்கப்பட்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் ஐபிஎல் முதல் தர போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வரும் சஞ்சு சாம்சனும் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை.

சொதப்பியவர்களுக்கு வாய்ப்பு
அதே நேரம் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் திரிபாதி ஆகியோர் அணியில் இடம்பெற்று உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால், ஷிகர் தவான் தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் 2 ஆம் தர இந்திய அணியில் இந்த 2 வீரர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

சாதிவெறி பிசிசிஐ
அதில் ரிஷப் பண்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். எனவே இதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி பிசிசிஐ அணித்தேர்வை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ட்விட்டரில் #Casteist_BCCI, அதாவது சாதிவெறி பிசிசிஐ என்ற ஹேஷ்டேக்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

ஒரே சாதியில் 7 வீரர்கள்
இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பிசிசிஐ எதிர்ப்பு ட்வீட்டுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. திலிப் மண்டல் என்ற பேராசிரியர் வங்கதேச தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களை சுட்டிக்காட்டி, "ஒரே சாதியை சேர்ந்த எந்த கோப்பையும் வெல்லாத 7 வீரர்களை வைத்துள்ளார்கள். ஆனால், சூர்யகுமார் யாதவை காரணமே இன்றி நீக்கியுள்ளனர். சஞ்சு சாம்சனும் இல்லை. பிசிசிஐயை கண்டு வெட்கப்படுகிறேன்." என்று பதிவிட்டு உள்ளார்.

நடராஜன் எங்கே?
பேராசிரியர் திலிப் மண்டல் மற்றொரு ட்வீட்டில், "நடராஜன் எங்கே? அவரும் நன்றாக விளையாடக்கூடியவர்." என்று கேள்வி எழுப்பி உள்ளார். பங்கஜ் குமார் யாதவ் என்ற நபர், வெளியிட்டுள்ள ட்வீட்டில், "பிசிசிஐயில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று பலர் சொல்கிறார். அப்படியென்றால் இது என்ன." என்று சூர்யகுமார் யாதவின் படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

சஞ்சு சாம்சன்
மனோஜ் ஜாங்கிட் என்பவர், "பண்டுக்கும், திரிபாதிக்கும் கிடைக்கும் வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கு மறுக்கப்படுவது ஏன்?" என இதே ஹேஷ்டேகுடன் கேள்வி எழுப்பியுள்ளார். கான்ஷியாம் மீனா என்பவர், "சாதி மற்றும் நிலப்பரப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்காதீர்கள்." என சஞ்சு சாம்சன் மற்ரும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டு உள்ளார்.

பிசிசிஐ மனுவாதம்
சமூக செயற்பாட்டாளரான ஹன்ஸ்ராஜ் மீனா வெளியிட்ட பதிவில், "உலகின் சிறந்த வீரரான சூரிய குமார் யாதவை வங்கதேச ஒருநாள் தொடரில் சேர்க்காதது பாஜகவின் சாதிய ஏற்றத்தாழ்வை அம்பலத்திவிட்டது. பிசிசிஐ தனது மனுவாத மனநிலையை மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications