சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரம்பரிய மருத்துவத்திற்கான ஆயுஷ் கவுன்சில் துவக்கம்...பன்னாட்டு தூதர்கள் பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை : உலகத் தமிழ் வர்த்தக சங்கம், தென்னிந்தியாவில் பாரம்பரிய மருத்துவங்களை பிரபலப்படுத்தவும், இயற்கை மருத்துவ முறைகள் மற்றும் மருந்து வகைகளை காட்சிப்படுத்தவும், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆயுர்வேத, சித்த, யுனானி, ஹோமியோபதி, யோகா. நேச்சுரோபதி மருத்துவர்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றை அடுத்தகட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் விதமாக ஆயுஷ் கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.

இவ்வமைப்பு இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குனரகம், மத்திய சித்த ஆராய்ச்சி நிலையம், மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சித்த மருத்துவம், மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் மருத்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவ சங்கங்கள், மருந்து உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட உள்ளது.

Indian Traditional Medicine Export Seminar to be held on April 16 th in Chennai

கவுன்ஸில் அயல்நாடுகளில் ஸ்மார்ட் கிளினிக் (Smart Clinic), வெல்லனஸ் சென்டர் (Wellness Centre), டெலி மெடிசன் (Telemedicine) உருவாக்கவும், நம் மருத்துவர்களை, மருந்து வகைகளை முஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தனியார் முதலீட்டாளர்கள் உதவியுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளது.

மலேசியா, இலங்கை, கொரியா மற்றும் வளைகுடா நாடுகளில் உடனடியாக கிளை ஏற்படுத்த படவுள்ளது. இந்த நிகழ்வில் முதல் கட்டமாக ஏப்ரல் மாதம் 16ம் தேதி வெள்ளிக்கிழமை, சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் இந்திய பாரம்பரிய மருத்துவ ஏற்றுமதி கருத்தரங்கம் ஆயுஷ் கான்பரன்ஸ் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டு தூதர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் தென்னிந்தியாவில் முன்னணி மருந்து நிறுவனங்களும், இயற்கை மருத்துவ நிறுவனங்கள், இயற்கை மருந்து வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் மருத்துவ மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, ஸ்மார்ட் கிளினிக், டெலி மெடிசன், வெல்லனஸ் சென்டர் போன்றவைகளை கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு உலகத் தமிழ் வர்த்தக சங்கம், தலைவர் மற்றும் ஆயுஷ் கவுன்செல் அமைப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

English summary
Indian Traditional Medicine Export Seminar to be held on April 16 th in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X