சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விறுவிறுப்பாகும் விஜே சித்ரா வழக்கு! எஸ்கேப்பாக ஹேம்நாத் போடும் திட்டம்! ’அவர்’ மீதும் சந்தேகம்..!

Google Oneindia Tamil News

சென்னை : சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்கொலை விசாரணை வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்க அவர் திட்டமிடுவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் கூறியதெல்லாம் பொய்யான தகவல் என விஜே சித்ராவின் 'நெருங்கிய நண்பர்கள்' கூறியுள்ளனர்.

பிரபல சீரியல் நடிகை விஜே சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா தற்கொலை செய்துகொள்ள அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்யாணத்திற்கு முன்பே ஹேமந்துடன் குடித்தனம்?.. விவரமாக பிளான் செய்த சித்ரா?.. பகீர் கிளப்பும் தகவல் கல்யாணத்திற்கு முன்பே ஹேமந்துடன் குடித்தனம்?.. விவரமாக பிளான் செய்த சித்ரா?.. பகீர் கிளப்பும் தகவல்

விஜே சித்ரா தற்கொலை

விஜே சித்ரா தற்கொலை

அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவுடன் பிரச்னை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனால், ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்தாகவும், இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறினர். சித்ராவின் செல்ஃபோனில் இருந்த SMS, புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஹேம்நாத் புகார்

ஹேம்நாத் புகார்

இந்நிலையில் அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது. சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம், அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தினால், என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புகிறேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஹேம்நாத் போலீசில் புகார் அளித்தார்

பரபரப்பு வழக்கு

பரபரப்பு வழக்கு

இதுதொடர்பாக வல யூகங்கள் வெளியான நிலையில், தன்மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனு தொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நண்பர் தகவல்

நண்பர் தகவல்

இதனிடையே சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் தப்புவதற்காகவே இப்படி அடிக்கடி மனுத் தாக்கல் செய்வதோடு, அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக திட்டமிட்டு கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு வருவதாக சித்ராவின் பெயர் வெளியிட விரும்பாத 'நெருங்கிய நண்பர்' ஒருவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," ஹேம்நாத் விஜே சித்ரா வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை தற்போதுவரை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், அடிக்கடி வழக்குகள் தொடுத்து அதன் மூலம் தன் மீதான விசாரணையை தடுக்க நினைக்கிறார் எனவும், அரசியல்வாதிகளின் தலையீடு, தனக்கு கொலை மிரட்டல் என்பதெல்லாம் அப்பட்டமான கட்டுக்கதை" எனக் கூறியுள்ளார்.

English summary
Hemnath has filed a petition seeking quashing of the chargesheet in the suicide case of iconic actress VJ Chitra, alleging that he is deliberately planning to drag out the suicide trial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X