சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாரா முதல் பில்லிங்ஸ் வரை.. முன்னாள் வீரர்களும், ஜாம்பவான்களும் சிஎஸ்கே வெற்றியை கொண்டாடுவது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: சிஎஸ்கே அணியின் ஐபிஎல் 2021 பைன்ல்ஸ் வெற்றிக்கு உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் சீசனில் 4வது முறையாக சாம்பியன் மகுடத்தை சிஎஸ்கே சூடி உள்ளது. கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே கோப்பையை வென்றுள்ளது.

கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 9 ஆனது: 20 பேரைக் காணவில்லைகேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 9 ஆனது: 20 பேரைக் காணவில்லை

மிகவும் பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் சிறப்பான பவுலிங், பேட்டிங், கேப்டன்சி, பீல்டிங் என்ற ஆல் ரவுண்டர் ஆட்டம் மூலம் சிஎஸ்கே அணி வெற்றிபெற்று இருக்கிறது.

சிஎஸ்கே

4வது முறையாக கோப்பை வென்ற சிஎஸ்கே அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ஜாம்பவான்களும் கூட வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிஎஸ்கே அணியில் முன்பு இருந்து இப்போது டெல்லி அணியில் இருக்கும் சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்களும் கூட ,மார்க் வுட் போன்ற முன்னாள் வீரர்களும் கூட சிஎஸ்கேவின் வெற்றியை தங்கள் வெற்றி போல புகழ்ந்து பாராட்டி உள்ளனர்.

 கிரிக்கெட்

கிரிக்கெட்

அதேபோல் பிரபல கிரிக்கெட் வீரர்களும் மற்ற அணியில் ஆடும் வீரர்களுமான டேவிட் வார்னர் போன்றவர்களும், முன்னாள் ஜாம்வான் வீரர்கள் பிரைன் லாரா, ரிச்சர்ட்ஸ் போன்றவர்களும் கூட சிஎஸ்கே அணியின் வெற்றியை பாராட்டி உள்ளனர். அதிலும் டேவிட் வார்னர் சிஎஸ்கேவின் வெற்றியை கிட்டத்தட்ட தன்னுடைய வெற்றி போல இன்ஸ்டாவிலும், ட்வீட்டரிலும் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.

கொல்கத்தா


மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளின் வெற்றியை விட சிஎஸ்கேவின் வெற்றியை பலர் இப்படி கொண்டாட நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல் விஷயம் தோனியின் லெகசி. வெற்றிபெறவே முடியாது என்று கருதப்பட்ட அணியை பைனல் வரை கொண்டு வந்தது. பைனலில் வெற்றிபெற வைத்தது. 4 வருடமாக அணியில் பெரிய மாற்றம் செய்யாமலே மூன்று முறை பைனல் கொண்டு வந்தது என்று சிஎஸ்கே அணியை மிக சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார்.

கிரிக்கெட் விமர்சகர்கள்

கிரிக்கெட் விமர்சகர்கள்

மற்ற கிரிக்கெட் விமர்சகர்கள் எல்லாம் சிஎஸ்கே கதை முடிந்துவிட்டது என்று கருதும் போது தோனி மட்டும் அணியை சிறப்பாக வழி நடத்தி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அணியை கோப்பை வெல்ல வைத்தார். இரண்டாவது சிஎஸ்கே அணி தங்கள் வீரர்களை ஒரு குடும்பம் போல நடத்துகிறது. கோப்பை வென்ற பிறகு பலரும் இதை கவனித்து இருக்கலாம்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஒவ்வொரு வீரரின் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அணியில் ஆடாத வீரர்களும் சமமாக மதிக்கப்பட்டனர். சிஎஸ்கே அணி தங்கள் வீரர்களை வெறும் அணி என்பதை தாண்டி குடும்பமாக மதித்தது. சர்வதேச அளவில் லீக் ஆட்டத்தில் ஒரு அணியை எப்படி நடத்த் வேண்டும் என்பதற்கு சிஎஸ்கே எடுத்துக்காட்டாக இருந்தது. இதனால்தான் சிஎஸ்கேவில் இருந்து வெளியேறிய வீரர்கள் கூட சிஎஸ்கேவை கொண்டாடினார்கள்.

Recommended Video

    IPL 2021: CSK வெற்றியை கொண்டாடிய திரைபிரபலங்கள் | Dhanush, Simbhu,Sathish
    ஹைதராபாத்

    ஹைதராபாத்

    ஹைதராபாத் போன்ற அணியில் வார்னர் போன்ற முன்னாள் கேப்டனே பிரச்னைக்கு உள்ளாக்கும் போது சிஎஸ்கேவில் எவ்வளவு மோசமாக ஆடினாலும் அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளித்து இருக்கிறது. இதை மொயின் அலியே வெளிப்படையாக குறிப்பிட்டார். இதுதான் சிஎஸ்கே அணியின் வெற்றியை முன்னாள் வீரர்கள் பலரும் கொண்டாட காரணம் ஆகும்.

    லீக் அணி

    லீக் அணி

    அதேபோல் சிஎஸ்கே ஒரு நாட்டின், ஒரு சிட்டியின், லீக் அணி என்பதை தாண்டி ஒரு கல்ட் அணியாக உருவெடுத்துவிட்டது. பார்ம் அவுட்டில் இருக்கும் வீரர்களை எடுப்பதில், தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத டு பிளசிஸ் போன்ற வீரர்களை பிரதானமாக முன்னிறுத்தி கோப்பையை வெல்வது என்று சிஎஸ்கே அணி சர்வதேச அணிகளுக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு திட்டங்களை வகுப்பதும் அந்த அணியை வெற்றியை பலர் இப்படி கொண்டாட முக்கிய காரணம் ஆகியுள்ளது.

    சிஎஸ்கே அணி இருக்குமா?

    சிஎஸ்கே அணி இருக்குமா?

    அடுத்த சீசனில் இதே சிஎஸ்கே அணி இருக்குமா என்று தெரியாது. இப்போது உள்ள வீரர்கள் அடுத்த சீசனில் இருப்பார்களா என்று தெரியாது. ஆனால் இந்த சிஎஸ்கே அணி கடந்த 4 வருடங்களில் உருவாக்கியது சர்வதேச அணிகளுக்கான மிகப்பெரிய படிப்பினை. கடந்த 4 வருட சிஎஸ்கேவின் ஆட்டம், பிளானிங் எல்லாம்.. பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்த வேண்டும், வீரர்களை எப்படி மதிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்பதற்கான கைட் புக்காக உருவெடுத்துள்ளது.

    English summary
    IPL 2021 CSK vs KKR final match: Why world celebrates Chennai Super Kings victory like their own?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X