Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கேம் சேஞ்ச்?".. ஸ்டாலினை கவனிச்சீங்களா.. மேட்டரை கொளுத்தி போட்ட சீனியர்கள்.. புழுங்கும் கதர்கள்?

காங்கிரஸ் கட்சி திமுகவின் செயல்பாடுகளில் வருத்தம் கொண்டுள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் செயல்பாடுகள், நாளுக்கு நாள் கூட்டணியில் உள்ள காங்கிரஸை நெளிய வைத்து வருகிறதாம்.. இது தொடர்பான ஒரு செய்தியும் வட்டமடித்து வருகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசியல் விவகாரம் சூடுபிடித்து வருகிறது.. உட்கட்சி பூசல்கள் ஒவ்வொரு கட்சியிலும் வெடித்து வந்தாலும், கூட்டணி கட்சிகளுக்குள்ளும் புகைச்சல்கள் கிளம்பி உள்ளது.

தமிழக பாஜக மீது அதிமுக கோபத்தில் உள்ளது.. வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகிறது.. அதேபோல, திமுக கூட்டணியிலும் இது உள்ளது என்றாலும், அதை பகிரங்கப்படுத்தவில்லை.

 பட்டினப்பிரவேசம்

பட்டினப்பிரவேசம்

எப்படி வெளியே சொல்வது என்று தெரியாமல், சில கட்சிகள் மென்று விழுங்கி கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கனவே பேரறிவாளனை கட்டிப்பிடித்த விஷயத்தில் காங்கிரஸ் தரப்பு நொந்து போயுள்ளதாக கூறப்பட்டது.. அதேபோல, தீவிர ஆர்எஸ்எஸ்காரரான வெங்கையாடு நாயுடுவை வரவழைத்து, தீவிர ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளரான கருணாநிதிதியின் சிலையை திறக்க வைத்தது முதல், பட்டினப்பிரவேச விவகாரத்தில் பின்வாங்கியது வரை நேரடியாகவே பார்த்து மனம்புழுங்கி உள்ளதாகவும் செய்திகள் வந்தன.

 மாய தோற்றம்

மாய தோற்றம்

இப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென அழகிரி ஒரு பேட்டி தந்தார்.. "தமிழகத்தில் எங்கள் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியில் இருக்கிறது... ஆட்சிக்கு எதிராக, அதிமுக - பாஜக பேசுகிற காரணத்தால், அவை தான் எதிர்க்கட்சி பணியை செய்வதாக, ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.. அது உண்மையல்ல... நாங்களும் ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்" என்று சொன்னபோதே, திமுக தரப்பில் லேசான அதிர்வு எழுந்தது.. இவ்வளவு நாள் இல்லாமல் அழகிரி ஏன் இப்போது, தங்கள் தவறை சுட்டிக்காட்ட முனைகிறார் என்ற சந்தேகமும் வலுத்தது.

சீனியர்கள்

சீனியர்கள்

இதற்கு நடுவில், மறுபடியும் திமுக தரப்பில் ஒரு தர்மசங்கடம் எழுந்தது.. அதாவது, குஜராத் தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனை கட்டிப்பிடித்த போட்டோவை, போஸ்டராகவும் ஒட்டி, பாஜக தங்களுடைய பிரச்சாரத்திற்கு பயன்படுத்த போவதாக சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, இந்தி மொழிக்கு எதிராக, திமுகவின் சீனியர்கள் பேசிய பேச்சுக்கள், காங்கிரஸை மேலும் நிலைகுலைய வைத்துவிட்டதாக கூறப்பட்டது.

 இந்தி மொழி

இந்தி மொழி

ஏற்கனவே வடமாநிலங்களில் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திக்கு எதிராக திமுக தலைவர்கள் பேசுவதால், தங்கள் கட்சியின் மதிப்பை மேலும் குலைக்கும் என்ற கவலையும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளதாக சலசலக்கப்பட்டது... இப்போது விஷயம் என்னவென்றால், இன்னொரு சலசலப்பு காங்கிரசுக்குள் கிளம்பி உள்ளது.. பேரறிவாளனை ஸ்டாலின் கட்டிப்பிடித்தார் இல்லையா? இந்த விவகாரம் இன்னும் அடங்கவில்லை.. ஒருவேளை முதல்வர் ஸ்டாலின், ஏதோ திட்டமிட்டுதான் இப்படியெல்லாம் செயல்படுகிறாரா என்ற டவுட், காங்கிரஸ் தரப்புக்கு வந்துள்ளதாம்..

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.. கடந்த வருடம் ராஜீவ் நினைவு தினத்தின்போது, அதாவது மே 21ம் தேதி ஸ்டாலின் மதுரையில் இருந்தார்.. அப்போது அவர் தலைமையில, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியும் எடுத்திருந்தார். ஆனால், இந்த வருஷம் மே 21ல், ஸ்டாலின் ஊட்டியில இருந்தார்... ஆனால், கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கவில்லையாம். உறுதிமொழி எடுக்காவிட்டாலும் பரவாயில்லை.. பேரறிவாளனை கட்டிப்பிடித்ததுடன், அந்த வழக்கில் மீதம் இருக்கும் 6 பேரையும் விடுதலை செய்வது குறித்த சட்ட ஆலோசனையிலும் ஈடுபட்டதுதான், மிகப்பெரிய வருத்தமாக உருமாறி உள்ளதாம்..

சான்ஸ்

சான்ஸ்

பாஜக அரசுடன் திமுக அரசு, இணக்கம் பாராட்டி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியோ, பெருத்த தர்மசங்கடத்தில் சிக்கி வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு, பாஜகவுடன் அதிமுகவுக்கு இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி கொண்டு, காங்கிரஸ் தரப்பு அதிமுகவுடன் கூட்டணி வைக்க சில முயற்சிகளை மறைமுகமாக மேற்கொண்டதாகவும் தகவல்கள் பரபரத்தன.. ராகுல், சோனியா காந்தி இருவருமே, திமுக மீது மிகுந்த மரியாதையையும், நம்பிக்கையைம் வைத்து வரும் நிலையில், காங்கிரஸ் திமுகவை விட்டு எங்கும் போகாது என்றே நம்பப்படுகிறது.. இருந்தாலும், "அதுக்கும்" சான்ஸ் இருக்குமோ.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+