• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நாராயணா".. "சொன்னது நீதானா சொல் சொல் சொல்.. சம்மதம் தானா?".. டென்ஷனில் அறிவாலயம்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஆட்சி காலத்தில், திமுக மேற்கொண்ட அதே ரூட்டைதான், தற்போது தமிழக பாஜகவும் கையில் எடுத்து, ஆளும் கட்சியை கேள்வி எழுப்பி வருகிறது. இதுதான் திமுக தரப்பை தற்சமயம் கடுப்பாக்கியும் வருகிறது.

ஒரு கட்சியை விட சிறப்பாக செயலாற்றி, அரிய பல திட்டங்களையும் அறிவித்து, மக்களின் மனதில் இடம் பிடிப்பது ஒரு வகை.. குற்றம் கண்டுபிடித்தே, சம்பந்தப்பட்ட கட்சியை டேமேஜ் செய்வது மற்றொரு வகை.

இப்படிப்பட்ட அரசியல்தான் தற்போது தேசிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.. இதற்கு நம் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல..

சிக்கலில் ஈழத் தமிழர்கள்-அகதிகளாக பதிய மத்திய அரசு அனுமதி தராததால் அவதி- தமிழக அரசு குரல் தருமா? சிக்கலில் ஈழத் தமிழர்கள்-அகதிகளாக பதிய மத்திய அரசு அனுமதி தராததால் அவதி- தமிழக அரசு குரல் தருமா?

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான குற்றச்சாட்டை திமுக சொன்னால், திமுகவின் இன்றைய ஆட்சியை பாஜக விமர்சித்து கொண்டிருக்கிறது.. அதிலும் தமிழக பாஜகவின் நாராயண் திருப்பதி புது டெக்னிக் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.. கடந்த முறை அதிமுக ஆட்சியை, திமுக என்னவெல்லாம் குறை சொல்லி அறிக்கை விட்டதோ, அதையெல்லாம் கிண்டி எடுத்து வெளியே கொண்டு வந்து, அதை திமுகவிடமே திருப்பி தந்து கொண்டிருக்கிறார் நாராயணன்.

 நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

இப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தஞ்சையில் தேர்திருவிழாவில் அப்பாவி உயிர்கள் பலியாகின.. அதற்கு பாஜகவின் செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயண் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. திமுக அரசை கண்டித்ததுடன், சென்னையில் பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயை நினைவுபடுத்தி அந்த ட்வீட்டை போட்டிருந்தார்.. சுபஸ்ரீ இறந்தபோது, எதிர்க்கட்சி தலைவரான, திமுக தலைவர் முக ஸ்டாலினின் ட்வீட் பதிவிட்டிருந்தார்.

 சுபஸ்ரீ

சுபஸ்ரீ

அதில், "அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம்,அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? 2019, செப்டம்பர் மாதம் 12ம் தேதியன்று பேனர் விழுந்து விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ மரணத்தின் போது இந்த விமர்சனங்களை முன் வைத்தவர் அன்றைய தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு @mkstalin அவர்கள்" என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

உயிர்பலி

உயிர்பலி

இந்த ட்வீட்டைதான் நாராயணன் எடுத்து பதிவிட்டு, "இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று நீங்கள் கேட்ட அதே கேள்வியை தான் கேட்கிறோம். அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?" என்ற அரசின் மீதான அன்றைய எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனம் சரியென்றால், அதே விமர்சனம் இன்றைய அரசுக்கும் பொருந்தும் தானே? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இன்றும் இதேபோல திமுகவிடம் ஒரு எழுப்பியிருக்கிறார்.. கடந்த, 2020, ஜுன் 30ம் தேதி, முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "காட்டுமிராண்டித்தனமான காவல்நிலைய கொலைகளை மனசாட்சியின்றி மறைத்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்" என்று அப்போதைய ஆட்சியை குற்றஞ்சாட்டி கேள்வி எழுப்பியிருந்தார்.

சம்மதம்தானா

சம்மதம்தானா

இந்த பழைய ட்வீட்டை, பாஜக நாராயணன் இன்று தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு, "சொன்னது நீதானா சொல் சொல் சொல் .......சம்மதம் தானா?" என்று கேட்டுள்ளார்.. இன்றைய திமுக ஆட்சியில், இளைஞர் விக்னேஷ் உள்ளிட்டோரின் லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், நாராயணணின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.. இதை கண்ட திமுக தரப்பும் கடுப்பாகி உள்ளது.. திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறது

English summary
Is DMK doing the right thing, asks Tamil Nadu bjp leader tirupati narayanan and tweeted லாக்கப் மரணம் குறித்து பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X