திடீர் சைலன்ட்.. பக்காவாக காய் நகர்த்தும் "அவர்".. ஓபிஎஸ்ஸுக்கு மட்டும்தான் பதிலா? என்ன நடக்கிறது?!
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் பெரிதாகிக் கொண்டே இருக்கும் நிலையில், திமுகவோ தமிழ்நாடு அரசோ அதிமுக குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறது. அதிமுகவில் நடப்பது நடக்கட்டும் என்று திமுக தரப்பு அமைதி காத்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் பணியில் மொத்த அரசும் களமிறங்கி பணிகளை செய்து வருகிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்புகளை பணிகளை கவனித்து வரும் நிலையில், அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் களத்தில் இருந்து கொரோனா பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.
ஒரு பக்கம் கொரோனா தடுப்பு பணிகள் இங்கு நடந்து கொண்டு இருக்கும் போது இன்னொரு பக்கம் அதிமுகவில் தீவிரமான உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. சசிகலாவின் தொடர் ஆடியோக்கள் காரணமாக அதிமுக தரப்பே கலங்கி போய் இருக்கிறது.

கலக்கம்
சீக்கிரம் நான் வந்துவிடுவேன்.. சீக்கிரம் நான் கட்சியை மீட்பேன்.. அதிமுகவை மீட்டு கொண்டு வருவேன் என்று சசிகலா கூறி வருகிறார். முக்கியமாக தென் மாவட்ட அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகளுடன் சசிகலா தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள். கொரோனா பரவல் முடிந்தவுடன் கட்சியை எப்படியாவது மீட்டு விடலாம் என்ற குறிக்கோளில் சசிகலா காய் நகர்த்தி வருகிறார்.

இபிஎஸ் மீட்டிங்
ஒரு பக்கம் சசிகலா ஆடியோ வெளியிட்டு வரும் நிலையில்.. இன்னொரு பக்கம் நேற்று முதல்நாள்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் 9 பேருடன் தனியாக மீட்டிங் நடத்தினார். அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு விஷயங்களை பேசினார். ஓபிஎஸ் கலந்து கொள்ளாமல் 9 நிர்வாகிகளை மட்டும் தனியாக அழைத்து இபிஎஸ் இப்படி திடீர் மீட்டிங் போட்டதும் கேள்விகளை எழுப்பியது.

முக்கியத்துவம்
அதிமுக இவ்வளவு நடக்கும் நிலையில்... அதிமுக விவகாரத்தில் திமுக அமைதியாக இருப்பது போல தெரிந்தாலும், திமுக இதில் சத்தமின்றி காய் நகர்த்தி வருவதாகவும் பேசிக்கொள்கிறார்கள். முக்கியமாக கடந்த சில தினங்களில் ஆளும் கட்சியும் சரி, அமைச்சர்களும் சரி.. ஓபிஎஸ் விடும் அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். கொரோனா பணியாளர்கள் நியமனம் தொடங்கி தேனியில் நடந்த கொரோனா மீட்டிங் வரை ஓபிஎஸ் - மற்றும் தமிழ்நாடு அரசு இடையே இணக்கமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

கோரிக்கை
தமிழ்நாடு அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை வரிசையாக ஓபிஎஸ்ஸும் பாராட்டி வருகிறார். சரியாக சொல்லவேண்டும் என்றால் ஓபிஎஸ் கொஞ்சம் எதிர்கட்சித் தலைவர் போல மரியாதையுடன் நடத்தப்படுகிறார். அவரும் ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவர் போல செயல்படுகிறார். ஆனால் எதிர்கட்சித் தலைவரான இபிஎஸ் குறித்து தமிழ்நாடு அரசு பெரிதாக கவலை அடையவே இல்லை. அவரை கண்டுகொள்வதும் இல்லை என்கிறார்கள். அதாவது இபிஎஸ்ஸுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.

ஓபிஎஸ்
முக்கியமாக ஓபிஎஸ் கேள்விகளுக்கு மட்டுமே சில அமைச்சர்கள் பதில் அளிப்பதால்.. இபிஎஸ் தரப்பு மொத்தமாக ஓரம்கட்டப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் ஏற்கனவே அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் என்ற இரண்டு குழு இபிஎஸ்ஸுக்கு எதிரியாகி உள்ளது. இபிஎஸ் நடத்திய மீட்டிங்கிற்கு கூட பெரிதாக செயலாளர்கள் வராத நிலையில், தற்போது திமுக அரசும் இபிஎஸ் மீது பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

கேள்வி
ஓபிஎஸ் அல்லது சசிகலா முக்கியத்துவம் பெறுவதற்காக இப்படி செய்யப்படுகிறதோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இன்று திடீரென ஓபிஎஸ்ஸை இபிஎஸ் சந்தித்ததும் கூட இபிஎஸ் அனுப்பிய சமாதான முயற்சியின் தூதாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சி தலைவராகவும் இபிஎஸ் லேசாக முக்கியத்துவத்தை இழக்க தொடங்கிவிட்டாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இது எல்லாம் சசிகலா நடத்தும் சைலன்ட் மூவாக இருக்குமோ என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சசிகலா
அதிமுகவில் பல தலைவர்கள் தற்போது அரசுடன் இணக்கமாக செல்கிறார்கள். தமிழ்நாடு அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை பாராட்டுகிறார்கள். ஆனால் இபிஎஸ் இதுவரை அப்படி பாராட்டாமல் ஒதுங்கி இருப்பதும் சந்தேங்களை எழுப்பி உள்ளது. சசிகலாவை உள்ளே கொண்டு வருவதற்காக கட்சிக்கு உள்ளேயே இபிஎஸ் ஓரம்கட்டப்படுகிறாரோ என்று கேள்விகள் எழுந்துள்ளன. அதே சமயம் இப்படி பல எதிர்ப்புகளை மீறி முழுதாக ஆட்சியை நடத்தி முடித்தவர் இபிஎஸ் என்பதால்.. இதை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications