ஒவைசி தமிழகத்திற்கு தேவையில்லை... அதிரடி காட்டும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா..!
சென்னை: அசாதுத்தீன் ஒவைசி போன்றவர்கள் தமிழகத்திற்கு தேவையில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நேற்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது அந்த சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து பேசியிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் கூட கொடுக்கப்படாத நிலையிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார் ஜவாஹிருல்லா. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறை கொடுக்கப்பட்டது போல் 5 தொகுதிகளோ அல்லது அதற்கு மேல் ஓரிரண்டு தொகுதிகளோ கூடுதலாக கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியாக தெரிகிறது.
இதனிடையே பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஜவாஹிருல்லா அளித்துள்ள பேட்டியில், ''தமிழகத்திற்கு ஒவைசி போன்றவர்களின் தேவை எழவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகம் முற்றிலும் வேறுபாடு உடையது. இங்கு நீங்கள் எந்த ஒரு இஸ்லாமியர் வீட்டு திருமணத்துக்கு சென்றாலும் அதில் 50 பேராவது இந்து சகோதரர்கள் இருப்பார்கள்.
அதேபோல் இந்து சகோதரர்கள் வீட்டு விஷேசங்களுக்கு சென்று பார்த்தால் அங்கு இஸ்லாமியர்கள் இருப்பார்கள். இப்படி மத மாச்சரியங்களை கடந்து அனைவரும் சகோதரத்துவத்தை பேணி காக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஏற்கனவே இங்குள்ள இஸ்லாமிய இயக்கங்கள் சமூக நீதிக்காக போராடி வருகின்றன.
இதுமட்டுமல்லாமல் திமுக மற்றும் அதிமுகவிலும் சிறுபான்மையின பிரிவை சேர்ந்த பலர் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார்கள். இதனால் பீகார், உத்தரப்பிரதேசத்தை போன்ற நிலை இங்கு இல்லை.'' எனத் தெரிவித்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications