சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த புத்தகம்... வியந்து போன பாரதி புத்தகாலயம் .. ஸ்டாலின் தான் காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அளித்த "Journey of a Civilization: Indus to Vaigai" என்ற ஆங்கில புத்தகம் தற்போது தங்களிடம் ஸ்டாக் இல்லை என்றும் அனைத்து புத்தகமும விற்று தீர்ந்துவிட்டதாகவும் பாரதி புத்தகாலயம் அறிவித்துள்ளது.

Recommended Video

    Sonia Gandhi-க்கு Stalin கொடுத்த புத்தககம்.. இதுக்கு பின்னால இவ்வளோ விஷயம் இருக்கா?

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். நேற்று முன்தினம் 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வழங்கினார்.

    நேற்று இடதுசாரித் தலைவர்கள் ராஜா, சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

    ஸ்டாக் இல்லை

    ஸ்டாக் இல்லை

    சோனியா, ராகுலைச் சந்தித்த ஸ்டாலின், ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய "Journey of a Civilization: Indus to Vaigai" என்ற ஆங்கில நூலைப் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானதையடுத்து அந்த புத்தகத்தை பலரும் வாங்க ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக புத்தகம் ஒரே நாளில் விற்று தீர்ந்தது,

    புத்தகம் தீர்ந்தது

    புத்தகம் தீர்ந்தது

    இந்நிலையில் "Journey of a Civilization: Indus to Vaigai" புத்தகம் பதிப்பித்த அத்தனை பிரதிகளும் விற்று தீர்ந்தன. அடுத்த பதிப்பு குறித்த விவரம் விரைவில். அறிவிக்கப்படும் என்று பாரதி புத்தகாலயம் அறிவித்துள்ளது. இந்த புத்தகத்தின் விலை 3000 ரூபாய் ஆகும். ஒரே நாளில் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் அடுத்த பதிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது. இந்த புத்தகம் தமிழில் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் வரும் என்றும் கூறப்படுகிறது.

    என்ன புத்தகம்

    என்ன புத்தகம்

    முன்னதாக சோனியா காந்திக்கு தங்களது பதிப்பகத்தில் வெளியான புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் பரிசளித்ததற்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயம், தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது. ஒரு புத்தகத்தை படிப்பதற்கு தூண்ட முதல்வர் ஸ்டாலின் காரணமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் தான் இணையதளங்களில் இரண்டு நாளாக வைரலாகி வருகிறது.

    குறைக்குமா

    குறைக்குமா

    சிந்துவெளிக்கும் வைகைக்குமான தொடர்புகளை மிகவும் அழுத்தமாக பதிவு செய்யும் இந்த புத்தகம் தமிழில் வெளியாகும் போது, அதன் விலையை குறைக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் ஆங்கில பதிப்பின் விலை 3000 என்பது தான் காரணம். இதை பாரதி புத்தகாலயம் பரிசீலிக்கும் என்று நம்பலாம்.

    English summary
    'Journey of a Civilization: Indus to Vaigai' book no stock in Bharathi Puthakalayam. yesterday mk stalin presented this book to congress leader sonia gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X