சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவுக்கு 17.. அதிமுகவுக்கு 1.. மற்றவர்களுக்கு முட்டையாம்.. சொல்கிறது ஜூனியர் விகடன் சர்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் வெல்லப்போவது எந்த கூட்டணி?.. வெளியான கருத்துக் கணிப்பு- வீடியோ

    சென்னை: 18 சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக 17 தொகுதிகளில் வெல்லும் என்று ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு ஒரு இடம் கிடைக்கலாமாம். மற்றவர்களுக்கு முட்டையாம்.

    இப்போதைக்கு அதிமுக நிலை என்னவென்றால், சபாநாயகரை தவிர்த்து ஆதரவு எம்எல்ஏக்கள் 113 பேர் உள்ளார்கள். இதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு போன்றோரும் அடக்கம்!

    இதில் தனியரசு அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டாலும், மீதமுள்ள 2 பேர் தனித்துதான் செயல்பட்டு வருகின்றனர். இதைதவிர கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அமமுக சார்பில் உள்ளனர்.

    இதுவரைக்கும் என்ன செஞ்சீங்க.. இந்தா இதை குடிச்சு பாரு.. தம்பிதுரையிடம் கோபாவேசம் காட்டிய மக்கள்! இதுவரைக்கும் என்ன செஞ்சீங்க.. இந்தா இதை குடிச்சு பாரு.. தம்பிதுரையிடம் கோபாவேசம் காட்டிய மக்கள்!

    212 தொகுதிகள்

    212 தொகுதிகள்

    எனவே இந்த 5 பேரின் முடிவுகள்தான் அதிமுகவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. அதாவது இருக்கும் 113 பேரில் இந்த 5பேர் நீங்கலாக பார்த்தால் கணக்கு 108 வருகிறது. தமிழக மொத்த சட்டமன்ற தொகுதிகள் 234-ல் இப்போதைக்கு இருப்பது 212 தொகுதிகள்தான்!

    நிர்ப்பந்தம்

    நிர்ப்பந்தம்

    இந்த 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தால் அது 230 தொகுதிகளாக உயரும். இதன்படி பார்த்தால் 116 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் இந்த ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அப்படியானால் மேலும் 8 தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது. அப்போதுதான் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலையும் எடப்பாடி அரசுக்கு ஏற்பட்டுள்ளதுதான் இன்றைய சூழல்!

    சர்வே

    சர்வே

    சரி விஷயத்துக்கு வருவோம்.. நிறைய கருத்துக்கணிப்புகள் தனியார் நிறுவனங்கள், சார்பில் நடத்தப்பட்டு வந்தாலும், இப்போது, ஜூனியர் விகடனும் ஒரு கருத்து கணிப்பினை நடத்தி உள்ளது.இதில் தொகுதிகள் வாரியாக 18 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்னிறுத்தி சர்வே நடத்தப்பட்டுள்ளது. எந்த தொகுதியில், அதிமுக, திமுக, அமமுக, கட்சிகள் வலுவாக உள்ளன என்றும், சரிவாக உள்ளன என்றும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

    கணிசமான ஓட்டு

    கணிசமான ஓட்டு

    கூட்டிக்கழித்து பார்த்தால், ஜூவியின் கணிப்பு படி, இடைத்தேர்தலில் திமுகதான் முன்னோக்கி பயணித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் அமமுகவும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்றவை பல தொகுதிகளில் கணிசமாக ஓட்டுக்களை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.

    17-ல் வெற்றி

    17-ல் வெற்றி

    இந்த 18 தொகுதிகளில் 17-ல் திமுக வெற்றி பெறும் என்று அடித்து சொல்கிறது ஜூவி! அதிலும் பாப்பிரெட்டி தொகுதியில் மட்டும் இழுபறி நீடிக்குமாம்! ஏற்கனவே திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகளின் எண்ணிக்கை 97 ஆக உள்ளது. இப்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 17 தொகுதிகளையும் இதில் சேர்த்தால் 114 என்று கணக்கு ஆகிறது.

    ஆட்சி கவிழுமா?

    ஆட்சி கவிழுமா?

    இந்த நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கண்டிப்பாக கொண்டு வரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அதிமுகவுக்கு எதிராக உள்ள அந்த 5 வாக்குகளும் திமுகவுக்கு சாதமாக வருமானால் 117 என்று ஆதரவு பெருகும்! அப்படியானால் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தமிழகத்தில் நிகழும் என்றும், எடப்பாடி ஆட்சி கவிழும் என்றும் இறுதி முடிவை சொல்கிறது ஜூவியின் கருத்து கணிப்பு.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இருந்தாலும், இப்படி ஒரு ஆட்சி மாற்றத்தை திமுக கொண்டு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சில தொகுதிகளில் இடைத்தேர்தலை அதிமுக தள்ளி வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் சேர்த்தே முன்வைக்கிறது இந்த கருத்து கணிப்பு!

    English summary
    Junior Vikatans Pre poll Survey of upcoming Bye Election to 18 assembly constituencies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X