சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடினமான காலத்தை கடக்கிறோம்.. எதிராளியை குற்றம் சொல்ல வேண்டிய நேரமல்ல.. பிரதீப் கவுர்

Google Oneindia Tamil News

சென்னை: நாம் மிகவும் கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறோம். தற்போதைய சூழலில் யாரும் யாரையும் குற்றம்சாட்ட இது நேரம் அல்ல என ஐசிஎம்ஆர் தொற்று நோயியல் துறை ஆராய்ச்சியாளர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் அலை மிகவும் வேகமாக வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 3.79 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 3645 பேர் மரணமடைந்துள்ளார்கள். வடஇந்தியாவில் மிகவும் மோசமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

சென்னையில் கொரோனா சுனாமி.. மக்களே மிக, மிக கவனம் வேணும்.. சிறப்பு அதிகாரி அட்வைஸ்! சென்னையில் கொரோனா சுனாமி.. மக்களே மிக, மிக கவனம் வேணும்.. சிறப்பு அதிகாரி அட்வைஸ்!

கடினமான காலம்

கடினமான காலம்

இதை கட்டுக்குள் வைக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்கிறார்கள். நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் நாம் மிகவும் கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறோம்.

வழிமுறைகள்

வழிமுறைகள்

தற்போதைய நிலையில் யாரும் யாரையும் குற்றம்சாட்ட இது நேரம் அல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவி புரிய வேண்டும். அத்துடன் கொரோனா விதிகளையும் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

நீங்கள் வைரஸை தடுத்து நிறுத்தலாம். ஒரு வைரஸ் தான் பரவுவதற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள் என பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தடுப்பூசியும் முகக்கவசமும் சமூக இடைவெளியும்தான் கொரோனா வைரஸை எதிர்க்கும் திறமையான ஆயுதங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மக்களும் அரசை குற்றம்சொல்வதை விட்டுவிட்டு கொரோனா வைரஸ் சங்கிலியை அறுக்க தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும். முடிந்தவரை அக்கம்பக்கத்தினருக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

English summary
K.Prabhdeep Kaur says that we are going through very difficult times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X