ஒரே மதம், ஒரே மொழி.. இந்தியை திணிப்பதே பாஜக அரசின் வேலை! அமித்ஷா குழுவுக்கு கமலின் மநீம கண்டனம்
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான குழு குடியரசுத் தலைவரிடம் சமர்பித்துல்ள அறிக்கை இந்தி மொழியை திணிக்கும் வகையில் இடம்பெற்றதாக கூறி மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் துணைத் தலைவர் மௌரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு வெவ்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்க தொடர்ந்து முயற்சித்து வருவது கண்டனத்திற்குரியது. அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல், பிரச்சினைகளைத் திசைதிருப்ப மொழியை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடச் செய்வது ஏற்கத்தக்கதல்ல.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் செயல்படும் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 11-வது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

பரிந்துரை
ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே கட்டாயம் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் என அப்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கில மொழி பயன்படுத்தும் இடங்களிலும் அதைப் படிப்படியாக ஒழித்துவிட்டு, இந்தி மொழியை அமல்படுத்த வேண்டும்.

இந்தி திணிப்பு
பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளை, ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியில் தயாரிக்க வேண்டும். அரசுப் பணிகளில் சேர இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்தியைப் பயன்படுத்தாத அரசு அதிகாரிகளை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம்கூட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபோல, இந்தியைத் திணிக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அக்குழு சமர்ப்பித்துள்ளது. இது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்
இந்தித் திணிப்பை எதிர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் மொழிப் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் தொடர் இந்தித் திணிப்பால், நாடு முழுவதுமுள்ள ஹிந்தி பேசாத மாநிலங்களில் போராட்ட சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு இனம், மதம், மொழி, பண்பாடு என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடிவேரான வேற்றுமையில் ஒற்றுமையை அழித்து, ஒரே நாடு, மொழி, மதம், உணவு, கலாச்சாரத்தை நிறுவ மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவது, தேசிய ஒருமைப்பாட்டைச் சிதைத்துவிடும்.

தேசிய ஒருமைப்பாடு
மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது, ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. தனித்தன்மை கொண்ட ஒவ்வொரு மொழியையும் பாதுகாப்பதை விடுத்து, இந்தியை மட்டும் திணிக்க முற்படுவது தேச ஒற்றுமைக்கு எதிரானது.

திசை திருப்பும் முயற்சி
மக்களைப் பிரித்துப் பார்க்கும் இந்த முயற்சியை எந்த மாநிலமும் ஏற்காது. கட்டுக்கடங்காமல் போயிருக்கும் விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை மறக்கச் செய்ய, மொழியைப் பயன்படுத்துகிறது பாஜக அரசு. மக்களைப் பிரிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, கொஞ்சம் பொதுநலனிலும் அக்கறை காட்டுங்கள் மத்திய அமைச்சர்களே!" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்











Click it and Unblock the Notifications