சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மர்ம நபர்கள்... சந்தேகம் கிளப்பும் கமல்ஹாசன்..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் மர்ம நபர்கள் நடமாடுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்பதே தனது புகார் என்றும் கூறியுள்ளார்.

Kamalhassan file complaint about Vote counting centre Security system

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

''தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் மீது நம்பகத்தன்மை இல்லை.
ஸ்ட்ராங் ரூமை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தன்னிச்சையாகவே செயலிழப்பது, இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கண்டெய்னர் லாரிகள் வருவது, லேப்டாப்களுடன் மர்ம நபர்கள் வருவது என சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.''

இதான் ஸ்டாலின்.. ஒரே உத்தரவு தான் போட்டார்.. சரஸ்வதி தம்பி, தங்கை படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட திமுகஇதான் ஸ்டாலின்.. ஒரே உத்தரவு தான் போட்டார்.. சரஸ்வதி தம்பி, தங்கை படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட திமுக

''வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. வாக்காளர்கள், வேட்பாளர்கள் , அரசியல் கட்சி பிரதிநிதிகள் போன்றோருக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. தற்போது வாக்காளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் இருக்கின்றனர்.''

''இந்த நிலை நான் போட்டியிட்ட தொகுதியில் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது. கண்டவர்களும் வாக்குப்பெட்டிகளை டூவிலர்களில் எடுத்துச்செல்லும் அவல நிலை இங்கு உள்ளது.''

''விஜய், அஜித், போன்றோர் எதில் வாக்களிக்க வந்தார்கள், எப்படி வாக்களிக்க வந்தார்கள் என்பதைக் காட்டிலும் அவர்கள் வாக்களிக்க வந்ததே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.'' இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனுக்குள் கொடுத்த பிறகு அவர் இதனைக் கூறினார்.

English summary
Kamalhassan file complaint about Vote counting centre Security system
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X