சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'நா டான்ஸ் ஆட வரல'... ஆர்வக் கோளாறு ரசிகர்.. டென்ஷனான கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: நான் இங்கு டான்ஸ் ஆடி, பாட்டுப்பாட வரவில்லை என்று கமல்ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கோவை: காவி, கருப்பு… சாயம் பூசாதீங்க… பிரச்சாரத்தில் ‘காண்டான’ கமல்!

    தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் நடைபெற உள்ள நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    ஏற்கனவே லோக் சபா தேர்தலை சந்தித்த அனுபவம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இருந்தாலும், சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை இதுதான் அவர்களுக்கு 'கன்னி' தேர்தல்.

    கோபம்.. இப்படி பண்ணா என்ன அர்த்தம்.. அவருக்கே போன் போட்ட ராமதாஸ்..அதுக்கப்பறம் நடந்துதான் டிவிஸ்ட்! கோபம்.. இப்படி பண்ணா என்ன அர்த்தம்.. அவருக்கே போன் போட்ட ராமதாஸ்..அதுக்கப்பறம் நடந்துதான் டிவிஸ்ட்!

     டென்ஷனான கமல்

    டென்ஷனான கமல்

    இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன், பீளமேட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், கமல்ஹாசனை கோவை பாஷையில் பேசுமாறு சப்தமிட்டார். முதலில் இதை கண்டுகொள்ளாத மாதிரி கமல் இருந்தாலும், மீண்டும் மீண்டும் அந்த நபர் கமலை அப்படி பேசச் சொல்லி குரல் கொடுக்க டென்ஷனாகிட்டார் மனிதர்.

     டான்ஸ் ஆட வரல

    டான்ஸ் ஆட வரல

    சற்று காட்டமாகவே பதிலளித்த கமல், 'அந்த தொண்டர் 'சதிலீலாவதி' படத்தில் நான் பேசியது போல் கோவை பாஷையில் பேச வேண்டும் என்கிறார். நான் இங்கு நடிக்க வரவில்லை. என் நடிப்பை பார்க்க வேண்டுமெனில், யூடியூபில் அந்த வீடியோ உள்ளது. போய் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை டான்ஸ் ஆடவோ, பாட்டுப்பாடவோ சொல்லாதீர்கள். நான் அதற்கு வரவில்லை.

     கருப்பு சாயம்

    கருப்பு சாயம்

    எனக்கு எந்த சாயம் பூசினாலும் அது ஒட்டாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது காவியா இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி. மக்களிடம் வரி விதிப்பு மற்றும் டாஸ்மாக் ஆகியவைகளை வைத்து மட்டுமே வருமானம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பாதி டாஸ்மாக் கடைகளை மூடிட்டு அரசை லாபகரமாக நடத்த முடியும்.

     புது ஐடியா

    புது ஐடியா

    40 வருடங்களாக மதுபானத்தை பழக்கிவிட்டார்கள். இப்போ அது நம் மனவியாதி ஆகிவிடுகிறது. தமிழர்களுக்கு ஆல்கஹால் ரத்தத்தில் ஓடுகிறது. அதை உடனே நிறுத்திவிட்டால், பல குணாதிசியங்கள் மாறிவிடும். முதலில் தமிழகத்தில் உள்ள 5,000 மதுபான கடைகளை குறைத்து, அந்த பகுதிக்கு அருகில் மனோதத்துவ மருத்துவர்கள் இருக்கும் மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்" என்று புது ஐடியாவை கமல் தெரிவித்துள்ளார்.

    English summary
    kamalhaasan angry on fan - ரசிகரிடம் கோபப்பட்ட கமல்ஹாசன்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X