பல்டி.. இந்து மதம் இல்லைன்னு நான் மறுக்கவில்லை.. நண்பரிடம் சொன்ன கமல்ஹாசன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து மதம் இருப்பதை நான் மறுக்கவே இல்லை என்றும், ராஜராஜ சோழன் காலத்தில், சிவனை வழிபட்டவர்கள் சைவர்கள் என்றும், விஷ்ணுவை வழிபட்டவர்கள் வைணவர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள் எனவும் கமல்ஹாசன் கூறியதாக அவரது நண்பர் பகிர்ந்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், "திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

திராவிட இயக்கம்

திராவிட இயக்கம்

சினிமா என்பது வெகு மக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது. இடைப்பட்ட காலத்தில் இது இல்லாமல் இருந்தது. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும்போது, இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் 'கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை' என்றார்கள். அழகியல் பற்றி நிறைய பேசினார்கள்.

அடையாளங்கள்

அடையாளங்கள்

கலையில் அழகியல் முக்கியமானதுதான். ஆனால், மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 ராஜராஜ சோழன் இந்து அரசனா?

ராஜராஜ சோழன் இந்து அரசனா?

வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்." என்று கூறினார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

வெற்றிமாறனின் இந்த கருத்துக்கு பாஜகவினர், இந்துத்துவா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், "இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம், வைணவம், சமணம் இருந்தது. அது ஆங்கிலேயர்கள் நமக்கு வைத்த பெயர். என்ன சொல்வதென்று தெரியாமல் வைத்தார்கள்." என தெரிவித்திருந்தார்.

நண்பர் விளக்கம்

நண்பர் விளக்கம்

இந்த நிலையில் கமலின் நண்பரும் எழுத்தாளருமான ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியுமான பி.ஏ.கிருஷணன், இதுகுறித்து கமல்ஹாசன் தன்னிடம் தெரிவித்த கருத்தை பகிர்ந்துள்ளார். "10 வது நுாற்றாண்டில், ராஜமுந்திரி என்ற இடம் இல்லை. ராஜமகேந்திரவரம் என்றே அழைக்கப்பட்டது. அதுபோன்றே இந்து மதம் பற்றி, எளிமையான கருத்தையே நான் சொன்னேன்.

இந்து மதம்

இந்து மதம்

ராஜராஜ சோழன் காலத்தில், சிவனை வழிபட்டவர்கள் சைவர்கள் என்றும், விஷ்ணுவை வழிபட்டவர்கள் வைணவர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். மறுக்க முடியாத இந்த உண்மையை நான் தெரிவித்தேன். இந்து மதம் இருப்பதை நான் மறுக்கவே இல்லை.' என்று விளக்கமளித்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+