சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆமா.. உதயநிதியிடம் பணம் வாங்கினேன்.. ஆனால்".. ஓபனாக போட்டு உடைத்த கமல்.. அரண்டு போன திமுக!

உதயநிதி ஸ்டாலின் மீது கமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் களத்தில் கமலும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மறைமுக மோதல் வெடித்து கிளம்பி உள்ளது.. அதேசமயம் இந்த மோதலின் பின்னணி என்ன என்ற காரணத்தையும் ஆராய வேண்டி உள்ளது.

2 நாளைக்கு உதயநிதியிடம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை... ஏன்னா, நாங்கள் அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று கூறியிருந்தார்.

 உதயநிதி

உதயநிதி

அதுமட்டுமல்ல, கிராமசபை உள்ளிட்ட திமுக தனது வாக்குறுதிகளை காப்பியடிப்பதாக கமல் சொல்லியிருந்த நிலையில், "நாங்கள் இதையெல்லாம் 50 வருஷமாக நடத்திக்கிட்டு இருக்கோம்.. 50 வருஷமாக கமல் என்ன தூங்கிட்டு இருந்தாரா? என்று கேட்டார் உதயநிதி. உதயநிதி பற்றிய பேச்சுக்கள், கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு கமல் சொன்னதாவது:

வரி

வரி

"நான் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் படம் நடிச்சிருக்கேன்.. அதுக்கு பணமும் வாங்கி இருக்கேன்.. அப்ப கூட அது சரியான பணமா என்று பார்த்துதான் வாங்கினேன். அதுக்கு வரியும் கட்டியிருக்கிறேன்... உதயநிதி கூட படம் பண்ணிவிட்டாரே, இவர் நேர்மையானவர் இல்லை என்று சொன்னால் நான் எப்படி ஒப்புக் கொள்வது? ஆனால், உதயநிதி நேர்மையானவர் இல்லை என்பது என் வாதம்... நான் நேர்மையானவர் என்பது என் வாழ்க்கை" என்றார் கமல்.

 நேர்மை

நேர்மை

ஒரு பொதுக்கூட்டத்தில் கமல் பேசும்போது, மறுபடியும் தன் நேர்மை குறித்து தெளிவுபடுத்தினார்.. "நேர்மையை நான் தினந்தோறும் பழகுகிறவன்... நேர்மை என்பது என் எலும்போடு ஒட்டியிருக்கும் தோல்... இவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது. ஒருவேளை பாஜக தருதோ? என்று கேட்கிறார்கள்... ஜிஎஸ்டி கொண்டுவந்த நாள் முதல் பாஜகவை எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். நான் பாஜகவின் பி டீம் என்பது திமுக மட்டுமே பரப்பும் பொய்... நான் மகாத்மா காந்திக்கு மட்டுமே பி டீம்" என்றார்.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இப்படி கருத்தியல் மோதல்கள் 2 பேருக்கும் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், நாம் ஒருசிலரிடம் இதை பற்றி கேட்டோம்.. அவர்கள் சொன்னதாவது: "3 மாசத்துக்கு முன்பு, இதே உதயநிதியுடன் கமல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு செய்தி வந்தது.. ஆனால் கமல் கூடுதலாக சீட் கேட்பதால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கு பிறகு ஒரு டிவி சேனலில் ஸ்டாலின் அளித்த பேட்டியிலும், கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லி இருந்தார்.

 கூட்டணி

கூட்டணி

வழக்காக, ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் கூட்டணி நடத்தும், ஒத்துவராவிட்டால் வேறு கட்சியுடன் இணைந்து கொள்வது இயல்பான ஒன்றுதான்.. ஆனால் கமல் விஷயத்தில் அப்படி இல்லை.. திமுகவின் பி-டீம் கமல் என்று பாஜக சொல்ல ஆரம்பித்துள்ளது.. ராதாரவி கோவையில் பிரச்சாரம் செய்யும்போது, இதைதான் சொன்னார்.. "இவரும் திமுகவைதானே திட்டறார்ன்னு நினைச்சிட்டு நம்பி போட்டுடாதீங்க.. அவர் திமுகவின் கைகூலி.." என்றார்.

 ஓட்டுக்கள்

ஓட்டுக்கள்

அதனால், இப்படிப்பட்ட யூகத்தை உடைக்கவும் உதயநிதியும் கமலும், விமர்சனங்களை காட்டமாக எடுத்து வைக்கலாம். என்னதான் பாஜக அப்படி ஒரு பழியை கமல் மீது சொல்லி வந்தாலும், திமுகவின் ஓட்டை கமல் பிரிப்பார் என்ற மாற்று கருத்தையும் மறுத்துவிட முடியாது" என்றனர்.

English summary
Kamalhasan slams DMK Udhayanidhi Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X