• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்னாச்சு.. "அந்த 4 நாட்கள்".. கமல் எடுத்த அதிரடி முடிவு.. வானதியை திணறடிக்கும் மய்யம்..!

|

சென்னை: கமல் எடுத்த அதிரடியாக முடிவினை பார்த்து, தமிழக பாஜக கலங்கி போய் கிடக்கிறது.. அதேசமயம் மய்ய உறுப்பினர்கள் உச்சக்கட்ட சந்தோஷத்தில் உள்ளனர்.

  kamal Haasan போடும் முதல் கையெழுத்து இது தான் - Makkal Needhi Maiam Mahendran | Oneindia Tamil

  இந்த முறை கமல், கோவை தெற்கு தொகுதியை குறி வைத்துள்ளார்.. இதே தொகுதியில் வானதி சீனிவாசனும் களம் காண்கிறார்..

  இந்த கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை என்றே சொல்ல வேண்டும்.. அன்றைய தினம் அப்படித்தான் இருந்தது.. ஆனால் நாளுக்கு நாள் அதிமுகவின் பலம் இங்கு குறைய ஆரம்பித்தது... இது ஒவ்வொரு வருட தேர்தல் முடிவில் வரும் வாக்கு சதவீதங்களில் தெளிவாக பார்க்க முடியும்.

  பாஜக

  பாஜக

  கடந்த 2019 எம்பி தேர்தலில்கூட, பாஜகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்தித்தது.. ஆனால், பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 46, 368 மட்டும்தான்.. அதனால்தான் அதிமுக கூட்டணியின் பலம், மற்றும் பாஜக மீதான மக்களின் அதிருப்தி, இவைகளை கணக்கு செய்து கமல் இந்த தொகுதியில் குதித்துள்ளார்.

  காங்கிரஸ்

  காங்கிரஸ்

  அதேபோல திமுக கூட்டணியும் கமலுக்கு சில சூழல்களையே ஏற்படுத்தி தந்திருக்கிறது.. மயூரா ஜெயக்குமார் பலத்த போட்டி வேட்பாளராக இல்லை என்பதும், வலிமை பொருந்திய ஒரு நபரை இங்கு நிறுத்தியிருக்கலாமே என்றும் முணுமுணுப்புகள் எழுகின்றன.. இதற்கு பேசாமல் திமுக வேட்பாளரை நிறுத்தியிருந்தால் கூட, பாஜக, கமலுக்கு டஃப் தந்திருப்பார் என்ற கருத்துக்களும் எழாமல் இல்லை. இதுபோக, கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு திமுகவினர் களப்பணி எதுவும் செய்து தரவில்லை என்ற புகாரும் உள்ளது. இதையும் கமல் கரெக்ட்டாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.

  சிக்கல்

  சிக்கல்

  இப்போது கமலுக்கு இருக்கும் ஒரே சிக்கல், தன் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்.. மநீம கூட்டணியை பொறுத்தவரை நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை,.. அனல்கக்கும் வேறு மூத்த பேச்சாளர்களும் இல்லை.. ராதிகா, சரத்குமாருக்கு அவர்கள் கட்சிக்கே பிரச்சாரம் செய்ய நேரம் சரியாக இருக்கும் என்று தெரிகிறது.

  பிரச்சாரம்

  பிரச்சாரம்

  எனவே, கமல் மட்டுமே தமிழகத்தின் பல தொகுதிகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்.. அதனால், சொந்த செலவில் ஹெலிகாப்டரில் சென்று வருகிறார்.. தேர்தலுக்குள் எல்லா வேட்பாளருக்கும் பிரச்சாரம் செய்து விடவும் முயன்று வருகிறார்.. அதேசமயம், முதன்முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுவதால், கமல் வெற்றி மீதான எதிர்பார்ப்பு கூடி வருகிறது..

  ஸ்பெஷல்

  ஸ்பெஷல்

  வென்றுவிட வேண்டும் என்ற உறுதியிலும் உள்ளார். எனவே கோவை தெற்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாகவும், ஸ்பெஷலாகவும் பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது. இப்படி பறந்து பறந்து பிரச்சாரம் செய்து, கடைசி கட்டத்தில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்று மய்யத்தினரும் கமல் காதில் போட்டு வைக்க, அதன்படியே கமல் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

  கலக்கம்

  கலக்கம்

  வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிரசாரத்தின் கடைசி நாளான 4ம் தேதி வரை வேறு ஊர்களுக்கு எங்குமே சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல். கோவை தெற்கு தொகுதியில் உச்சகட்ட பிரசாரம் செய்ய கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளாராம்.. இதனால் வானதியின் கடைசிகட்ட பிரச்சார யூகத்துக்கும் பதிலடி தந்தது போல் இருக்கும் என்று கருதப்படுகிறது.. ஒருநாள் தொகுதியில் இருந்தாலே, பாஜகவுக்கு கலக்கத்தை தந்துவிடுவார் கமல்.. இப்போது தொகுதியிலேயே தங்கி பிரச்சாரம் செய்தால், கமலுக்கு வெற்றிதான் என்று பூரித்து போகின்றனர் மய்யத்தினர்.

   
   
   
  English summary
  Kamalhasans last four days campaign plan in Coimbatore south
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X