சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு அமைப்புகளின் வன்முறைதான் காரணம்.. சித்தார்த்தா மரணம் பற்றி கார்த்தி சிதம்பரம் திடுக் கருத்து!

காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்திற்கு அரசு அமைப்புகள் சிலவற்றின் அழுத்தமும் முக்கிய காரணம் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்திற்கு அரசு அமைப்புகள் சிலவற்றின் அழுத்தமும் முக்கிய காரணம் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காபி டே நிறுவனர் சித்தார்த்தா நேற்று முதல்நாள் மாலை திடீர் நேற்று மாயமானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திடீர் என்று கடிதம் எழுதிவிட்டு காணாமல் போன அவர் நேற்று முழுக்க மங்களூர் அருகே நேத்ராவாதி ஆற்றில் அவர் தேடப்பட்டு வந்தார்.

Karti P Chidambaram accuses CBI and ED for CCD Siddhartha death

இன்று அதிகாலை அவரின் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் தற்போது அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இவரின் மரணத்திற்கு வருமான வரித்துறை கொடுத்த அழுத்தமும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சித்தார்த்தா தற்கொலை குறித்து தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமின் மகன் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அரசு அமைப்புகள் சிலதான் எப்போதும் மக்களை வியபாரம், வர்த்தகம் செய்ய விடாமல் தடுக்கிறது. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வரி என்ற பெயரில் தொழில் முனைவோர்கள் மேல் அழுத்தத்தை கொடுத்து, வன்முறையை ஏவி விடுகிறது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள்தான் இது போன்ற வன்முறையை மக்கள் மீது ஏவி விடுகிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும். இவர்களின் அழுத்தமே தற்போது சித்தார்த்தாவின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது, என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

எம்பி கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, சொத்து முறைகேடு, வரி ஏய்ப்பு விசாரணை உள்ளிட்ட புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
MP Karti P Chidambaram accuses CBI and ED for CCD Siddhartha suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X