என் கணவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.. ஆனா 7 நாட்கள் கழித்துதான் அவரை பார்க்க முடியும்.. குஷ்பு கவலை
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குநரும் நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை அனைவரையும் வதைத்து வருகிறது. முதல் அலையில் தப்பியவர்கள் இந்த இரண்டாவது அலையின் கொடூர பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரமுகர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் சுந்தர் சிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

மகள்கள்
இதையடுத்து அவரது மனைவி குஷ்பு, மகள்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என அறிக்கை வெளியானது. அது போல் குஷ்புவின் உறவினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா
இதையடுத்து சுந்தர் சி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் விரைவில் நலம் பெற ரசிகர்களும் முக்கிய பிரமுகர்களும் வாழ்த்தினர். இந்த நிலையில் அவர் இன்றைய தினம் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

குஷ்பு ட்வீட்
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குஷ்பு கூறுகையில் நண்பர்களே உங்கள் பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. எனது கணவர் சுந்தர் சி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி
எனினும் அவர் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் எங்களது கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொண்டிருக்கிறார். எனவே நான் எனது கணவரை 7 நாட்களுக்கு பிறகுதான் நேரில் பார்க்க முடியும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications