சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. கொடநாடு வழக்கில்.. சாட்சியே மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி மனு.. என்ன காரணம்?

கொடநாடு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சாட்சிகளில் ஒருவரான ரவி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கொடநாடு விவகாரம் தற்போது தலைதூக்கி உள்ளது.. இதுகுறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், மேலும் பரபரப்பை கிளப்பியது.

இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே திமுக அரசு தன்னை சிக்க வைக்க முயல்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. இது சம்பந்தமான ஆலோசனையிலும் கடந்த சில தினங்களாகவே ஈடுபட்டும் வருகிறார்.

 லுங்கி யாருடையது.. கொடநாடு விஷயத்தில் ஒரே மர்மம்.. அதிமுகவுக்கு என்ன பயம்?.. செல்வபெருந்தகை கேள்வி லுங்கி யாருடையது.. கொடநாடு விஷயத்தில் ஒரே மர்மம்.. அதிமுகவுக்கு என்ன பயம்?.. செல்வபெருந்தகை கேள்வி

 கொடநாடு

கொடநாடு

நேற்றைய தினம் பேரவை கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிர்வு

அதிர்வு

இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள சதீஷன், சந்தோஷ் சாமி உள்ளிட்ட 3 பேர் சார்பில் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி சசிகலா மற்றும் சுதாகரனை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது... தமிழக அரசியலில் மிகப் பெரிய அதிர்வை இந்த மனு தாக்கல் ஏற்படுத்தி உள்ளது.. இதனால் அடுத்தடுத்த திருப்பங்களும் இந்த வழக்கில் ஏற்படக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

கொடநாடு

கொடநாடு

இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் இன்னொரு மனுவை சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சாட்சிகளில் ஒருவரான ரவி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சாட்சிகள்

சாட்சிகள்

அதில், கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனகராஜ் என்பவரை தனக்கு தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்கும்படி, பல தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசுத்தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் துவங்கவில்லை என்றும், நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருவதாகவும் ரவி கூறியுள்ளார்...

Recommended Video

    தவறு செய்தவர்களுக்கு தண்டனை.. கோடநாடு வழக்கில் யாரும் தப்ப முடியாது- Minister Thangam Thennarasu
    விசாரணை

    விசாரணை

    ஹைகோர்ட் உத்தரவின்படி, இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்... இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது... கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு ஒரு பக்கம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு கொண்டிருந்தாலும், சட்டரீதியான நடவடிக்கைகளும் தீவிரமாகி கொண்டிருக்கின்றன.. இதனால், அதிமுகவில் கலக்கம் சூழ்ந்துள்ளது.

    English summary
    Kodanadu murder case and Petition seeking stay of further hearing in Chennai High Court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X