Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணியாளர்களுக்கு இருக்கை வசதி இல்லையா? கடைகள், வணிக வளாகங்களுக்கு முக்கிய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைகள், வணிக வளாகங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுதுள்ளது.

மேலும், இருக்கை வசதி செய்து தராத நூற்றுக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இருக்கை வசதிகளை செய்து தரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

 முதலாளிகளின் தந்திரம்

முதலாளிகளின் தந்திரம்

சிறிய, பெரிய துணிக்கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், நீண்டகாலம் அனுபவித்து வரும் வேதனைகளில் ஒன்றாக இருப்பது இருக்கை வசதி இல்லாதது. நாள்தோறும் 11 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் ஊழியர்கள், கொஞ்சம் கூட அமர்ந்து இளைப்பாறி விடக்கூடாது என்கிற குறுகிய எண்ணத்தில் பல முதலாளிகள் செய்யும் தந்திரமான வேலைதான் இது. தமிழகத்திலும் இதை அதிகமாக காண முடியும்.

 தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு உத்தரவு

இவ்வாறு பல மணிநேரம் நின்றுகொண்டே வேலை செய்வதால், பணியாளர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நின்றுகொண்டே இருப்பதால் அவர்களின் மூட்டு, முதுகுத்தண்டு வடம் ஆகியவற்றிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனிடையே, இந்த பணியாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து சில ஊடங்களில் செய்திகள் வெளியாகின. இந்த சூழலில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கட்டாயம் இருக்கை வசதி அமைத்து தரப்படும் என உத்தரவிட்டது.

 அதிரடி ஆய்வு

அதிரடி ஆய்வு

அரசு உத்தரவிட்ட போதிலும், பெரும்பாலான வணிக இடங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் அமைத்து தரப்படவில்லை என்ற புகார்கள் வந்தன. இதன்பேரில், தொழிலாளர் நலத்துறை சார்பில் சென்னையில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நேற்று அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 190 கடைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 120 கடைகள் மற்றும் நிறுவனங்களில் இருக்கை வசதி செய்து தரப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.

 கடும் எச்சரிக்கை

கடும் எச்சரிக்கை

இந்நிலையில், இவ்வாறு அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆய்வு தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றும், பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+