கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு 30 நாட்களுக்குள் உரிமம்! வந்தாச்சு புதிய நடைமுறை! முழு விவரம்!
சென்னை: கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்குவது மற்றும் கழிவுநீர் அகற்றுவது தொடர்பாக புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் அரசால் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகள் குறித்த விவரம் வருமாறு;

மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசியக் கொள்கையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் முழு அளவிலான சுகாதாரத்தை வழங்குவதற்காக, கழிவுநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு மற்றும் கழிவுநீரை, வாகனங்கள் மூலம் அகற்றி, சுத்திகரித்தல், வெளியேற்றல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான திட்டம் தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நோக்கங்களுக்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்
அகற்றல் வாரியம் ஆகியவற்றிற்கான சட்டங்களைத் திருத்தி, ஒழுங்குபடுத்துவதற்கான உரிய வழிமுறைகளை உருவாக்கி அதன் தொடர்ச்சியாக புதிய விதிகளையும் உருவாக்கி 01.01.2023 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இச்சட்டம் மற்றும் விதிகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
(1)மலக்கசடு மற்றும் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2000/- ஆகும்.
(2)மேலும், உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது இச்சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும்.

(3)உரிய உரிமம் பெற்றவர்கள், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நேரம், வழி ஆகியவற்றை பின்பற்றி, குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.
(4) உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, புவியிடம் காட்டும் அமைப்பு (GPS) பொருத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வதுடன், அக்கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவை அனுப்புவதையும் உறுதிசெய்ய இவ்விதிமுறைகள் வழி செய்கிறது.
(5)உரிமம் பெற்ற வாகனங்கள் கசடுகளை அப்புறப்படுத்தும் வசதியினை ஒரு முறை பயன்படுத்துவதற்கு 6000 லிட்டர் வரைக்கும்
200/- ரூபாயும் 6000 லிட்டருக்கு மேற்பட்ட இனங்களுக்கு 300/- ரூபாயும் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
(6)கழிவுகளை அகற்றும் செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதைத் தடை செய்ய வழிமுறைகள் உள்ளதுடன், உரிமதாரர்கள் தவறு செய்தால் புகார்களை பதிவு செய்வதற்கான வழிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.
(7)இந்தச் சட்டம் மற்றும் உரிமத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றத்திற்கு 25,000/- ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அதன்பின்பு, இரண்டாவது மற்றும் தொடர் குற்றங்களுக்கு 50,000/- ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.
(8)மேலும் தொடர் குற்றங்களைச் செய்தால் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதுடன், குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
(9)மேற்படி நடவடிக்கைகளுக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
(10)மலக்கசடுகள், கழிவுநீர், இதன் தொடர்புடைய இதர கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் ஏற்ப விரிவான செய்முறை வழிகாட்டு நெறிமுறைகள் (Operative Guidelines) உருவாக்கப்பட்டுள்ளது.
(11)நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக நடைமுறைப்படுத்த துணை விதிகளை (bye-laws) உருவாக்கிட மாதிரி துணை விதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சட்டவிதிகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளிகளில் மலக்கசடுகள், கழிவுநீர் போன்றவற்றை வாகனங்கள் மூலம் கொட்டுதல் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications