Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்டர்வியூவே வேணாம்.. இதுதான் அதிமுக! ஓபிஎஸ் - இபிஎஸ்ஸின் அதிரடி.. மீட்டிங்கிலேயே அதிர்ந்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக இடையிலான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.. வெளிப்படையாக கூட்டணி முறிவு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறிந்து விட்டது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Recommended Video

    அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி.. பாஜக அறிவிப்பு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இரண்டு நாட்களாக நடந்தும் இன்னும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. பாஜக கேட்கும் வார்டுகள் மற்றும் மேயர் பதவிகளை அதிமுக கொடுக்க மறுத்து வருகிறது. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று கூறியது பெரிய சர்ச்சை ஆன நிலையில்தான் அதிமுக தற்போது நேரம் பார்த்து தனது வலிமையை காட்டிகொண்டு இருக்கிறதாம்..

    நீங்கள்தான் எங்களை நம்பி இருக்கிறீர்கள்.. நாங்கள் உங்களை நம்பி இல்லை என்பதை போலத்தான் பாஜகவை இந்த இரண்டு மீட்டிங்கிலும் அதிமுக டீல் செய்து இருக்கிறதாம்..

    மீட்டிங்கில் பேசியது என்ன?

    மீட்டிங்கில் பேசியது என்ன?

    இந்த மீட்டிங்கில் முதலில் முதல்நாள் 50 சதவிகித வார்டு இடங்களையும், 5 மேயர் பதவிகளையும் பாஜக கேட்டு இருக்கிறது. ஆனால் அதிமுக 5 சதவிகித இடங்கள் மட்டுமே கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மேயர் பதவிக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.. பார்க்கலாம் என்று பாஜகவிடம் அதிமுக தெரிவித்துள்ளது. 100 வார்டுகள் உள்ள கோவை மாநகராட்சியில் 30ஐ கேட்டுள்ளது பாஜக. ஆனால் அங்கு 5 மட்டுமே தருவதாக சொல்லியுள்ளது அதிமுக. இதை பாஜக ஏற்கவில்லை.

    இறங்கி வராத அதிமுக

    இறங்கி வராத அதிமுக

    பாஜகவும் 50 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதம், 15 சதவிகிதம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இறங்கி வந்துள்ளது. ஆனால் அதிமுக இதை பற்றி எல்லாம் கவலையேபடவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வளவு இடங்களைதான் கொடுப்போம்.. 5 சதவிகிதம் மிகவும் குறைவு என்றால் மாநகராட்சிகளில் தலா 8 சதவிகிதம் கொடுக்கிறோம். அதற்கு மேல் கொடுக்க முடியாது என்று அதிமுக விடாப்பிடியாக இருந்துள்ளது. ஆனால் பாஜக தொடர்ந்து அதிக இடங்களை கேட்ட போதுதான் அதிமுக கூட்டணியை முடிவிற்கு கொண்டு வந்து விடலாமே என்பது போல பேசி இருக்கிறதாம்.

    தயார் நிலையில் இருந்தது

    தயார் நிலையில் இருந்தது

    இப்படிப்பட்ட நிலையில்தான் மீட்டிங்கிலேயே அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை எடுத்து நீட்டியதாக கூறப்படுகிறது. அதாவது நாங்கள் முதல் கட்ட பட்டியலை தயார் செய்துவிட்டோம். நீங்கள் நாங்கள் தரும் இடங்களை ஏற்கவில்லை என்றால்.. தனியாக நாங்கள் போட்டியிட தயார் என்பது போல அதிமுக செக் வைத்ததாக கூறப்படுகிறது. அதோடு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அடங்கிய இரண்டு ஏ4 ஷீட்களை எடுத்து டேபிளில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

    நாங்க ரெடி நீங்க ரெடியா?

    நாங்க ரெடி நீங்க ரெடியா?

    நாங்கள் தனித்து போட்டியிட ரெடிதான்.. நீங்கள் ரெடியா என்பது போல அதிமுக முரண்டு பிடித்துள்ளதாம். ஆனால் பாஜக தரப்பு இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக திடீரென கடலூர், விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இது முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்தான். நாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள்..இல்லையென்றால் கூட்டணி ஓவர்.

    வேடிக்கை என்ன?

    வேடிக்கை என்ன?

    கூட்டணியில் நீடிக்க முடியாது.. என்பது போல அதிமுக இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கும் மேல் அதிமுகவிடம் பேச முடியாது என்ற நிலைக்கு பாஜக வந்துவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று தருமபுரி 31 வார்டுகள், திட்டக்குடி 24 வார்டுகள், சிதம்பரம் 33 வார்டுகள், நெல்லிக்குப்பம் 29 வார்டுகள், பண்ருட்டி 30 வார்டுகள், விழுப்புரம் 42 வார்டுகள், விருத்தாசலம் 33 வார்டுகள், கடலூர் 43 வார்டுகள், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் ஆகிய வார்டுகளில் அதிமுக முதல் கட்ட வேட்பாளர்களை வெளியிட்டது.

    வாபஸ் வாங்க வசதி

    வாபஸ் வாங்க வசதி

    இதில் வேடிக்கையான விஷயம் அதிமுக தரப்பு நேர்காணல் எதுவும் செய்யாமல் இந்த பட்டியலை தயார் செய்துள்ளது. இன்டர்வியூவே வேணாம்.. நமக்கு தெரியாதா யார் வலுவானவர்கள் என்று.. மாசெக்கள் அனுப்பிய லிஸ்டில் இருந்து சிறந்தவர்களை தேர்வு செய்யுங்கள் என்று அதிமுக தலைமை கூறியதாக கூறப்படுகிறது. அதாவது பாஜகவுடன் மீட்டிங் நடக்கும் போதே வேக வேகமாக இந்த லிஸ்டை வெளியிட வேண்டும் என்பதால் அதிமுக துரிதமாக நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

    டெல்லி சைலன்ட்

    டெல்லி சைலன்ட்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பாஜக டெல்லி தலைமையும் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இடையில் ஒருமுறை பாஜக டெல்லி தலைமையிடம் இதை பற்றி பேசி இருக்கிறது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக அதில் பாஜக டெல்லி தலைமை கவனம் செலுத்தி உள்ளது. தமிழ்நாடு தேர்தல் மீது பாஜக கவனமே செலுத்தவில்லையாம். கூட்டணி பற்றியெல்லாம் லோக்சபா தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் பாஜக தேசிய தலைமை இருக்கிறதாம்.

    பாஜகவும் இன்று வெளியிடுகிறது

    பாஜகவும் இன்று வெளியிடுகிறது

    அதிமுக இப்படி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வாபஸ் வாங்கும் என்று பாஜக எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக அப்படி எந்த திட்டத்திலும் இல்லை என்ற தகவல் பாஜக தரப்பிற்கு சென்றதால், பாஜகவும் தனது வலிமையை காட்டும் வகையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+