தேவேந்திர குல வேளாளர்களை ஏமாற்றிய மத்திய அரசு- பாஜக கூட்டணியில் இருந்து டாக்டர் கிருஷ்ணசாமி எஸ்கேப்?
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி வெளியேற முடிவு செய்துள்ளதை அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் இணைந்திருந்தது. பாஜகவின் அத்தனை நடவடிக்கைகளையும் டாக்டர் கிருஷ்ணசாமி முழு வீச்சில் ஆதரித்தும் வந்தார். தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை புதிய தமிழகம் முன்வைத்தது. இதனை ஏற்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. அப்போது முதலே எந்த அணியில் நீடிப்பது என்பதில் டாக்டர் கிருஷ்ணசாமி குழப்பமான நிலையில் இருந்து வருகிறார். அண்ணா திமுக மீண்டும் பாஜக அணிக்கு திரும்பும் என்பதும் டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜக அணியிலேயே புதிய தமிழகம் தொடருமா? அல்லது அதிமுக தலைமையிலான அணிக்கு போகுமா? என்கிற கேள்வி எழுந்தது. பாஜக அணியில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பியிருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் பாஜகவோ தென்காசியை விட்டுத் தர மறுத்துவிட்டது. இதனால் ராஜ்யசபா சீட்டுக்கு முயற்சிக்கிறார் கிருஷ்ணசாமி எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்குவதாக கொடுத்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது. இனி பிரதமர் மோடியை கும்பலோடு கும்பலாக நின்று சந்திக்க மாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெல்வோம். பிரதமர் மோடியை தனியாகவே சந்தித்து பேசுவோம்.
தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை. ஏற்கனவே அண்ணா திமுகவே கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தவரையில் வெற்றி கூட்டணியில்தான் இடம் பெறுவோம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications