கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி.. மானியம் தர அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும் என்பதால் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1050ஐ கடந்து விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும் என்பதால் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1015ஆக விற்பனையானது. இந்த நிலையில் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டு ரூ.1065 ஆக விற்பனையாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இதனிடையே ஏழை மக்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில், மத்திய அரசு விலை உயர்வை ரத்து செய்து விட்டு, மக்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது. சமையல் எரிவாயு விலை ரூ.1000ஐக் கடந்த பிறகும் மாதம் தவறாமல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல.

சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.710 ஆக இருந்த உருளை விலை இதுவரை ரூ.358 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 50.44% உயர்வு ஆகும். இவ்வளவு விலை உயர்வை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது!

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை உயரவில்லை. இந்தியாவில் இன்று கூட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8.50 குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சியாகும். உலக சந்தையில் விலை குறையும் போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்?

உஜ்வாலா வகை இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு மானியத்தை அனைவருக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், விலை உயர்த்தப்படுவது மக்களுக்கு நன்மை பயக்காது. விலை உயர்வை ரத்து செய்து விட்டு, மக்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம் -
மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications