'610 டூ 850'.. சமையல் கேஸ் விலை.. 7 மாதத்தில் எப்படியெல்லாம் ஏறி உள்ளது.. பாருங்கள்!
சென்னை: கடந்த 7 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.240 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, ஜூலை 1ம் தேதியான இன்று 850 என்கிற நிலையை எட்டி உள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மாற்றப்படுகிறது. ஒரு சில சமயங்களில் 15 நாளுக்கு ஒரு முறையும் மாற்றியமைக்கப்படுவது உண்டு.
அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 610 ரூபாய் ஆக இருந்தது. அதன்பின்னர் 2020 டிசம்பர் 2ம் தேதி 50 ரூபாய் உயர்ந்து 660 ரூபாய் ஆக மாறியது. ஆனால் அடுத்த அதிரடியாக அதே டிசம்பர் மாதத்தின் 15ம் தேதி மேலும் 50 ரூபாய் உயர்ந்து சிலிண்டர் விலை 710 ரூபாய் அதிகரித்தது.

பிப்வரியில் 3 முறை உயர்வு
அதாவது டிசம்பர் மாதமே இரண்டு முறை உயர்ந்ததுடன், 100 ரூபாய் வரை உயர்ந்தது. இதன் காரணத்தால்,அடுத்த மாதமான 2021 ஜனவரி மாதத்தில் விலை ஏற்றப்படவில்லை. ஆனால் பிப்ரவரி மாதம் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதாவது 710 ரூபாயில் இருந்து 735 ரூபாய் ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ம் தேதி மீண்டும் 50 ரூபாய் உயர்ந்து 785 ரூபாய் ஆக மாறியது. இந்த அதிர்ச்சிக்குள் இன்னொரு அதிர்ச்சியாக பிப்ரவரி 25ம் தேதி மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் முதல்முறையாக சிலிண்டர் விலை 810 ரூபாய் ஆக அதிகரித்தது.

விலை உயர்வு
அதாவது பிப்ரவரி மாதத்தில் பிப்ரவரி 1ம் தேதி 710 ஆக இருந்த நிலையில் மாத இறுதிக்குள் 810 ரூபாய் ஆக அதிகரித்தது. அதாவது ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்ந்தது. மார்ச் முதல் தேதியிலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. 810 ரூபாயில் இருந்து 835 ஆக உயர்ந்தது. வெறும் ஒரு வாரத்தில் 25 ரூபாய் மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

மீண்டும் விலைஏற்றம்
தேர்தல் நடந்த ஏப்ரல் மாதத்தில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. 835 ரூபாயில் இருந்து 825 ஆக குறைந்தது. மே மாதமும் விலை ஏற்றப்படவில்லை. ஜுன் மாதமும் விலை ஏற்றப்படவில்லை. தற்போது ஜூலை 1ம் தேதியான இன்று மீண்டும் விலை ஏற்றப்பட்டுள்ளது இன்று 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7 மாதங்களில் சிலிண்டர் விலை 240 ரூபாய் உயர்ந்துள்ளது

டீசல் விலை
தமிழகத்தில் பெட்ரோல் விலை 2020 நவம்பர் தொடக்கத்தில் 81 ரூபாய் ஆகவும், டீசல் விலை 70 ரூபாய் ஆகவும் இருந்தது. இந்த 7 மாதத்தில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து லிட்டர் ரூ.100ஐ தாண்டி உள்ளது. டீசல் விலை 94 ரூபாயை தொட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications