• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சிம்டாங்காரன் யார்னு தெர்தா மச்சி.. விவேக்கோட டிவிட்டராண்ட போய் பாரு கண்ணு.. செம செம! #Simtaangaran

|

சென்னை: சிம்டாங்காரன் படத்தின் பாடலின் வரிகளுக்கு அர்த்தம் என்ன என்பதை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

முதல் பாடலாக சிம்டாங்காரன் எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது. பலர் இந்த பாடலை டிரோல் செய்தனர். இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் அந்த பாடலின் அர்த்தத்தை வெளியிட்டுள்ளார்.

 அர்த்தம் வெளியிட்ட விவேக்

அர்த்தம் வெளியிட்ட விவேக்

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிடுகையில், அன்பு வணக்கம், சிம்டாங்காரன் பாடலின் மொழி- சென்னைத் தமிழ். பல்வேறு மொழிகளின் பாதிப்பு வெளிப்படுவதால், எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல சொற்கள் இருந்தாலும் (எ.கா டர் இந்தி,, உட்டா லக்கடி உருது) எதார்த்தனமான, உணர்வுபூர்மான , இனிமையான ஒலிக் கோர்வைகளை உடைய மொழி.

தனிச்சிறப்பு

எளிய மக்களின் வாழ்விற்கு அருகில் இருக்கும், அவர்கள் வாழ்வியலை பிரதிபலிக்கும் கொண்டாடும் இம்மொழியில் இப்பாடலை எழுதியதில் பெருமை அடைகிறேன். அர்த்தம் எளிதில் புரியாததால், அதைபுரிந்து கொள்ளத் துடிக்கும் பரவசமே பெரும்பாலும் இம்மொழியின், இவ்வகை பாடல்களின் (எ.கா அட்டக்கு பட்டக்கு டிமிக்கடிக்குற) தனிச் சிறப்பு என்பது எனது தாழ்மையான கருத்து.

 அன்பை பகிரவும்

அன்பை பகிரவும்

அதன் வெளிப்பாடே புரிந்தும் புரியாமலும் இருக்கும் இப்பாடலின் வரிகள். உங்களின் ரசனையையும் பின்னூட்டத்தையும் மதிக்கும் காரணத்தினால் இப்பாடலின் பொருளை வெளியிட கடமைப்பட்டுள்ளேன். பிழை இருப்பின்- மன்னிக்கவும், நிறை இருப்பின்- அன்பை பகிரவும்.

 சிம்டாங்காரன் என்றால் என்ன?

சிம்டாங்காரன் என்றால் என்ன?

#Simtaangaran- Chennai Tamil

 • பக்குரு- ஒரு வகை மீன் வலை, fishing net
 • பல்டி பக்குர- ஏமாத்தி பணத்த சுருட்டுரவன (வலை மீனை சுருட்டுவது போல்), one who swindles money
 • டர்ல- பயத்துல, in fear
 • டர்ல உடணும்- பயத்துல வச்சுருக்கணும்
 • பல்து= பல்தா கை- பெரிய ஆள், பலம் வாய்ந்தவன், big shot
 • வர்ல்டு- உலகம், world
 • பிஸ்து- பிஸ்தா
 • பிசுறு கெள்ப்பி- தூள் கெளப்பு, rock it
 • நெக்குலு- நக்கல்/ sardonic/ mocking/ sarcastic/ kidding
 • பிக்குலு- ஊர்காய் , pickle
 • நெக்குலு பிக்குலு- கெத்தான காரசாரமான ஆள், fierce
 • தொக்கல்- அந்தரம் be left hanging in the air
 • தொட்டன்னா தொக்கல்- அவன தொட்டன்னா அந்தரத்துல விட்டுடுவான்
 • மக்கரு- பழுது, repair
 • தர்ல- தரையில்
 • அந்தரு- தகராறு problem
 • சிம்டாங்காரன்- கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் attractive young man- charismatic/ fearless/ audacious கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே அந்த ஒருவன்.. நம் #சிம்டாங்காரன்
 • நின்டன் பாரன்- நிலையான ஒரு எடத்த எனக்குனு உருவாக்கிட்டேன் பார்
 • முஸ்டு- உன்ன முடிச்சிட்டு, after finishing
 • பக்குல போடன், விரிந்து வக்க போறேன்- buckle up n get reafy for my treat
 • கொக்கலங்கா- வட சென்னை விளையாட்டு
 • குபீலு- பொங்கும் சிரிப்பு
 • நம்ம புஷ்டுருக்க கோட்ட இல்ல, அல்லா ஜோரும் போட்டயில - என் சர்கார்ல கோட்டைகள் இல்ல, என் சந்தோஷமெல்லாம் என் மக்களிடத்தில்
 • வர்ல்டு மொத்தமும் அர்ல உடணும்- November 6 2018


என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
தொகுதி அமைப்பு
மக்கள் தொகை
18,06,761
மக்கள் தொகை
 • ஊரகம்
  0.00%
  ஊரகம்
 • நகர்ப்புறம்
  100.00%
  நகர்ப்புறம்
 • எஸ்சி
  19.49%
  எஸ்சி
 • எஸ்டி
  0.20%
  எஸ்டி

 
 
 
English summary
Lyricist Vivek gives the meaning of Simtaangara song as it was trolled in Social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more