சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தஞ்சை டெல்டாவில் அசத்தும் திமுக.. எந்த தொகுதியில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு.. மாலைமுரசு கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மாலை முரசு தொலைக்காட்சி இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பெரும்பலான தொகுதிகளிலே திமுகவே முன்னிலையில் உள்ளதாக கூறியுள்ளது.

மாலை முரசு தொலைக்காட்சி இன்றும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. நேற்றுவரை 52 தொகுதிகளுக்கு கருத்து கணிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்றும் தஞ்சை டெல்டாவை சுற்றியுள்ள பகுதிகளில் 26 தொகுதிகளுக்கு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

அவற்றின் விவரங்களை இப்போது பார்ப்போம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் திமுகவிற்கு 43 சதவீத ஆதரவு உள்ளதாகவும், அதிமுகவிற்கு 39 சதவீத ஆதரவு உள்ளதாகவும் கூறியுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் திமுக அதிமுக இடையே சமபலம்(41 சதவீதம்) உள்ளதாக கணித்துள்ளது.

வேனில் யாருன்னு பார்த்தீங்களா.. முருகனுக்காக.. 10 கி.மீ ஓட்டி வந்து கௌதமி சர்ப்ரைஸ்வேனில் யாருன்னு பார்த்தீங்களா.. முருகனுக்காக.. 10 கி.மீ ஓட்டி வந்து கௌதமி சர்ப்ரைஸ்

ஒரத்தநாடு

ஒரத்தநாடு

பட்டுக்கோட்டையில் திமுகவிற்கு 44 சதவீதமும், அதிமுகவிற்கு 41 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளது., ஒரத்தநாடு தொகுதியில் திமுகவிற்கு 47 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 42 சதவீதம் ஆதரவும் உள்ளதாக கூறியுள்ளது. ஒரத்த நாடு தொகுதியில் அதிமுகவின் நட்சத்திர வேட்பாளர் வைத்திலிங்கம் எம்பி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது,

கும்பகோணம்

கும்பகோணம்

தஞ்சாவூர் தொகுதியில் திமுகவிற்கு 38 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 36 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 17 சதவீதம் ஆதரவும் உள்ளதாக மாலைமுரசு கணித்துள்ளது திருவையாறு தொகுதியில் திமுகவிற்கு 47 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 38 சதவீதம் ஆதரவும் உள்ளதாக கூறியுள்ளது. கும்பகோணம் தொகுதியில் திமுகவிற்கு 45 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 39 சதவீதம் ஆதரவும் உள்ளதாக கூறியுள்ளது.

நன்னிலம்

நன்னிலம்

பாபநாசம் தொகுதியில் திமுகவிற்கு 46 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 41 சதவீதம் ஆதரவும் உள்ளதாம். திருவிடைமருதூர் தொகுதியில் திமுகவிற்கு 43 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 42 சதவீதம் ஆதரவும் உள்ளதாம். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுகவிற்கு 39 சதவீதம் ஆதரவும், திமுகவிற்கு 38 சதவீதம் ஆதரவும் உள்ளதாக மாலைமுரசு கணிப்பில் கூறியுள்ளது.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் தொகுதியில் திமுகவிற்கு 46 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 41 சதவீதம் ஆதரவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மன்னார்குடி தொகுதியில் திமுகவிற்கு 47 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 39 சதவீதம் ஆதரவும் உள்ளதாம். திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுகவிற்கு 45 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 40 சதவீதம் ஆதரவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வேதாரண்யம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக சமபலத்தில் (42) உள்ளதாக கூறியுள்ளது.

English summary
dmk party has the best chance of winning in Tanjore Delta in many constituency : said by maalimurasu poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X