சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓடுங்க ஓடுங்க அந்த ஆபத்து நம்மை நோக்கிதான் வருது.. சென்னை மக்களை அச்சுறுத்தும் 'மெட்ராஸ் ஐ'

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகரில் 'மெட்ராஸ் ஐ' கண் நோய் வேகமாக பரவிவருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. கண் மருத்துவமனைகளுக்கு, வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

இதுபோல, பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல் மற்றும் நீர் வடியும் பிரச்சினை ஏற்படும். கண்களில் கடுமையான வலி தென்படும். கண்கள் பார்க்க சிவப்பு நிறமாக மாறிவிடும். இதெல்லாம் மெட்ராஸ் ஐ நோயின் அறிகுறியாகும்.

Madras Eye has been spreading rapidly in Chennai

அடினோ வைரஸ்தான் இதற்கு காரணமாக டாக்டர்களால் கூறப்படுகிறது. பொதுவாக இது மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும்.

மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவக்கூடியது என்பதால், கண்களில் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது. கூட்டமான இடங்களை தவிர்க்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள், வேலை செய்யும் இடம் என கூட்டத்தில் உடனிருப்பவர்களிடமிருந்து பரவுகிறது. இதற்கு மருந்து கொடுத்தாலும் உடனே சரிாயகும் என சொல்லிவிட முடியாது.

பொதுமக்கள் கண்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். சுத்தமான டவல்களை பயன்படுத்த வேண்டும். நோயாளி பயன்படுத்திய டவல் உள்ளிட்ட பொருட்களை, மற்றொரு நபர் பயன்படுத்த கூடாது. இதன் மூலம், மெட்ராஸ் ஐ பரவுவதை தடுக்க முடியும்.

English summary
Madras Eye has been spreading rapidly in Chennai for the past few days. For eye hospitals, the number of incoming patients is increasing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X